நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம் Grass Valley, California, USA 62-0704 1நன்றி சகோதரனே. நீங்கள் உட்காரலாம். உண்மையாகவே நாங்கள் வாக்களித்தபடி கிராஸ் பள்ளத்தாக்கில் இருப்பதையும், இந்த ஐந்து நாட்களுமாக உங்களோடு ஐக்கியம் கொண்டு மகிழ்ச்சியடையவும், நோயுற்ற கர்த்தருடைய பிள்ளைகளுக்காக அந்த பெரிய மருத்துவரின் நோயாளிகளுக்காக ஜெபித்து, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என்னும் முறையில் கிடைத்த இந்த இரவு நேரத்தை சிறந்த சிலாக்கியமாகக் கருதுகிறேன், உலகின் பல்வேறு பகுதியில், நான் எங்கெங்கெல்லாம் சென்றிருந்தேனோ, அங்குள்ள பரிசுத்தவான்களின் வாழ்த்துகளைக் கொண்டு வருகிறேன். இந்நாட்களின் இரவில், இங்கே நடக்கிற கூட்டங்கள் வெற்றி அடைவதற்கு, பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நம்புகிறேன். அவர்களுடைய ஜெபத்தினாலும், நம்முடைய விண்ணப்பத்தினாலும் தேவன் நம்மைச் சந்தித்து ஆசீர்வதிப்பார் என்று உறுதியாயிருக்கிறேன். இப்பொழுது நம்மை நாமே சுகமாக்குகிறவர்கள் என்று அழைத்துக் கொள்ளவோ, அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட சபையின் பிரதிநிதிகளாகவோ நாம் இங்கே வரவில்லை. கிறிஸ்துவை எடுத்துக்காட்டுவதற்கென்றே நாம் வந்துள்ளோம். மேலும் நாம் இங்கு வந்திருப்பது, பிணியாளிகளைக் குணமாக்கவல்ல, அவர்களுக்காக ஜெபிக்கவும், இங்குள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கை பாரத்தை சற்று இலகுவாக்க, நம்மால் இயன்ற உதவியை செய்யவுமே வந்திருக்கிறோம், நீங்கள் எங்களுக்கு ஆசிர்வாதமாயிருப்பீர்கள் என்று உறுதியாயிருக்கிறேன். அது போலவே, நாங்களும் உங்களுக்கு ஆசிர்வாதமாய் இருப்போம் என்று நம்புகிறேன். 2கலிபோர்னியாவில் சென்ற முறை விஜயம் செய்ததை இப்பொழுது, நினைவு கூருகிறேன். அது என்னவென்றால், ஜனங்கள் துரிதமாக வீடு செல்ல விரும்புகின்றனர், இப்பொழுது வீடுகளில், தேசத்தின் பல பாகங்களில், வித்தியாசமான தனித் தன்மை வாய்ந்த ஜனங்களை நீங்கள் பார்க்கலாம். அவர்களில் சிலர், நீங்கள் பிரசங்கிப்பதை கேட்கிறதை மட்டும் விரும்புவர். வியாதிஸ்தருக்காக ஜெபிப்பதைக் குறித்துக் கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நான்கு அல்லது ஐந்து மணி நேர பிரசங்கத்தை நிகழ்த்தி அவர்களை அப்படியே அமர்ந்திருக்கச் செய்தால் அதுவே அவர்களை சரியானபடி மனநிறைவு கொள்ளச் செய்கிறதாயிருக்கிறது. ஆனால் இங்கே உண்மையாகவே புண்படுத்துகிறதாயிருக்கிறது, ''ஒரு குட்டிப் பிரசங்கம், வியாதியஸ்திருக்காக ஜெபம் இப்படி மிகவும் துரிதமாக வீடு திரும்பி, மறுபடியுமாய் இங்கே வர வேண்டுமே'' என்று சொல்பவர்களாகக் காணப்படுகிறார்கள். இங்கே எல்லாமே அவசரமாக காணப்படுகிறது. நாம் எங்கே சென்றுக் கொண்டிருக்கிறோம்? எல்லாமே, ''அவசரம், அவசரம், அவசரம், அவசரம், அவசரம்''. ஒரு வேளை கர்த்தருக்கு சித்தமானால் நான் இங்கிருக்கிற நாட்களில், ''ஊக்கம் செலுத்துதல்'' என்ற பொருளில் பிரசங்கிக்கலாம் என விரும்புகிறேன். ஒருவகையான தாழ்மைக்கு, தன்னைத் தாழ்த்துவதற்கு நாம் அதைத்தான் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். 3ஒரு சில வாரங்களுக்கு முன் நான் ஒரு விபத்துக்குள்ளானேன். வேட்டையாடுவதும், குறிவைத்துச் சுடுவதும், எனக்கு பிரியம். இங்கேயுள்ள வெதர்பி நிர்வாகத்தினரால் மறுபடியுமாய்த் துளையிடப்பட்ட துப்பாக்கி ஒன்று என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. சுடுவதற்காக தோட்டாவைப் போட்டேன். அது வெடித்து என் முகத்தில் இடித்தது, துப்பாக்கிக் குழாயை ஐம்பதடித் தூரத்திற்கு எனக்கு முன்பக்கமாகத் தூக்கி எறிந்தது. அதன் பின்பக்கமானது, கைப் பிடியானது அதே தூரத்திற்கு எனக்குப் பின்னாக விழுந்து, அந்த இடத்தின் புதரையும், சுற்றியுள்ளதையும் சிதைத்தது. கர்த்தருடைய பெரிதான கிருபையால், அது என்னுடைய கண்ணுக்கு அருகாமையில் கடந்து சென்றாலும், குறிபார்த்து சுடுவதற்கென தொலை நோக்கிக் கருவி தொங்கிக் கொண்டிருந்தபடியால், அதேவிதமாக என்னை அது இடிக்கவில்லை சிதைக்கவில்லை. இந்த சம்பவத்திலிருந்து, எனக்கு ஒரு எண்ணம் உண்டானது. பாருங்கள், உண்மையாகவே அது வெதர்பி கம்பெனியால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி அல்ல. அது வெதர்பி துப்பாக்கியாவதற்கென அது மறுபடியும் துளைக்கப்பட்டது. வேட்டையாடுகிற உங்களில் சிலருக்கு அது மாடல் 70-ன் செஸ்டர் என்று சொன்னால் புரியும். ஆர்ட்வில்சன் என்னும் கலிபோர்னியா சகோதரனால் அது எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் என் மகன் பில்லிபாலுக்குக் கொடுத்திருந்தார். ஆகையால் அவர்கள்... பில்லி இடது கை பழக்கமுள்ளவனாகையால், அதை அவன் ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. ஆகவே அவன் அப்பா, “இதை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்'' என்று சொன்னான். 4நல்லது, எப்பொழுதுமே, வெதர்பி துப்பாக்கியைத் தான் நான் விரும்புவேன். ஆனால் அதை என்னால் விலை கொடுத்து வாங்க முடியாது. அதன் பிறகு, நண்பர்களில் சிலர் அதை எனக்கு வாங்கிக் கொடுத்திருப்பார்களானால், அவர்கள் அப்படி செய்ய நான் விரும்பியிருக்க மாட்டேன். ஏனென்றால் அது மிகவும் விலையுயர்ந்ததாகும். நான் அடிக்கடி சொல்வது போல, என்னுடைய அருமையான ஊழியக்கார நண்பர்கள் கால்களில் காலணி கூட இல்லாமல் இருக்கும் போது, நான் வேட்டையாட அல்லது குறி பார்த்து சுடுவதற்கென அவ்வளவு அதிகமான பணத்தை ஒரு துப்பாக்கிக்கு செலுத்துவதை நான் அனுமதிக்க முடியாது. ஆகவே அதை நான் விரும்பவில்லை. ஆனால், என்னுடைய நண்பர்களில் ஒருவர் சொன்னார், ''நான் அந்த மாடல் 70-ஐ எடுத்து, அதிலிருந்து வெதர்பி துப்பாக்கி உண்டாக்குகிறேன். வெதர்பி கம்பெனியார் அப்படிச் செய்து உத்தரவாதம் தருகின்றனர். எனக்கு அதில் செலவு இல்லையே, ஏறக்குறைய பத்து, பன்னிரண்டு டாலர்கள் தான் செலவாகும்'' என்றார். ''அப்படியானால் செய்து தாருங்கள்'' என்றேன். ஆகவே, அவர் அதை எடுத்து, அந்தக் கம்பெனியில் கொடுத்தார். அவர்கள் அதை மறு துளையிட்டனர். அது வெடித்துவிட்டது. அது அப்படி இருந்திருக்காது. அப்படி இருந்திருக்க முடியாது... ஏதோ ஒன்றினால், எங்கோ ஓரிடத்தில் அழுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். 5அதிலிருந்து நான் கற்றுக் கொண்டது இதுதான், பாருங்கள். அது மிகுந்த ஒரு அழுத்தத்தைப் பெற்றது. அது வெடித்தது. பாருங்கள்? நாம் மிகுந்த அழுத்தத்தை விரும்புவதில்லை. அது வெடித்துவிடும். இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். இதில் வேத தத்துவக் கருத்தும் உண்டு. பாருங்கள், அந்த துப்பாக்கி முழுவதுமாக வெதர்பி கம்பெனியிலேயே உருவாக்கப்பட்டிருக்குமானால், அது அவ்விதமாக வெடித்து சிதறியிருக்காது. ஆனால் பாருங்கள், அதன் ஒரு பகுதியை மட்டும் மாற்றிய காரணத்தால் மிகுந்த அழுத்தம் உண்டான போது அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போயிற்று. அப்படியே மார்க்க உபதேசத்திலும், நாம் ஓட்டுப் போடக் கூடாது என்று விசுவாசிக்கிறேன். நாம் மரித்து மறுபடியும் பிறக்கின்றோம். அப்பொழுது தான் பரிசுத்தாவியானவர் நம்மை உந்தித் தள்ளும் நெருக்கம் அனைத்தையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிகிறது. ஏதோ ஒன்றிலிருந்து இல்லாத ஒன்றை உருவாக்கும் முயற்சியல்ல இது; நாம் மறுபடியும் தொடக்கத்திற்கே செல்ல வேண்டும் என எண்ணுகிறேன். கர்த்தரோடு ஐக்கியங் கொள்ள, உண்மையான மறு பிறப்பின் அனுபவத்திற்குப் பதிலாக, அநேக மனோதத்துவ மார்க்கத்தை நாம் இன்று பெற்றுள்ளோம். ஆகவே, அந்தப் பாதையில் எங்கோ ஓரிடத்தில் சிறியதாக ஒன்று தோன்றி சிறு கசிவை உண்டுபண்ணி, அழுத்தத்தைப் பின்னுக்குத் தள்ளும் போது, அது உன்னை சிதறடிப்பதை நீ உணர்வாய். ஆகவே, சுயத்திற்கு மரிக்கும் போது, எண்ணங்கள் எல்லாமும் செத்துவிடும் என்று விசுவாசிக்கிறேன். சுயத்திற்கு மரித்தல் அப்பொழுது தானே பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் உன்னை உருவாக்குகிறார். மறு பிறப்பை பெற்ற கிறிஸ்தவன் கர்த்தரோடு அப்படிப்பட்ட அனுபவத்தை பெறும்போது, மரணத்திலிருந்து ஜீவனுக்கு கடந்துவிட்டாய் என்பதை அறிவாய். அப்படித்தான் நாம் விசுவாசிக்கிறோம். 6நாம் வேதாகமத்தை விசுவாசிக்கிறோம், அது கர்த்தருடைய புத்தகம் என்று விசுவாசிக்கிறோம். நாம் வேதாகமத்தின்படி இருக்க வேண்டும். வேதாகமத்தில் அவர் எழுதி வைக்காத சம்பவங்களைக் கூட கர்த்தரால் நிகழச் செய்ய முடியும் என்று விசுவாசிக்கிறேன். அவர் கர்த்தர்; அவர் விரும்பியவாறு எதை வேண்டுமானாலும் செய்யக் கூடும். ஆனால், என் ஜீவிய நாட்களில் நான் அவரை பார்க்கக் கூடுமானால், அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றும்போது, அது வேதத்தில் உள்ள படியே என்று கண்டு அதுவே உண்மை என்று அறிவேன். பழைய ஏற்பாட்டில் ஊழியத்தில் இருக்கிற சகோதரர்கள் அறிவார்கள், லேவிய ஆசாரியத்துவத்தில், ஒரு தீர்க்கதரிசி சொல்லும் வார்த்தை உண்மையா? அல்லது சொப்பனங் காண்கிறவனின் சொப்பனம் சரியா? என்பதை அறிந்துகொள்ள ஒரே வழி இருந்தது. அவர்கள் ஊரீம், தும்மீம் என்பவைகளைப் பெற்றிருந்தனர். அவைகள் என்னவாக இருக்கும்? என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒழுக்க முறையின் படியும், மிகவும் பொருந்தும் வகையிலும் இதை நான் புரிந்துக் கொண்ட விதம் என்னவெனில், தேவாலயத் தூணில் தொங்கிக் கொண்டிருக்கும் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கும் கோத்திரங்களின் நாமத்தின்படி பன்னிரண்டு கற்கள் பதிக்கப்பட்டதாய், ஆரோன் தரித்த மார்ப்பதக்கத்தை எடுப்பார்கள். பின்பு, தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைப்பார். அப்பொழுது அந்தக் கற்கள் ஒருங்கே பிரகாசித்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை உருவாக்கும். இவ்விதமாக, தீர்க்கதரிசனம் உண்மையானது தானா? இல்லையா? என்று கண்டுக் கொள்வார்கள். தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்டவர். அவர் தேவன். அவர் ஆவியாயிருக்கிறார். அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒளி ஊரீம், தும்மீம் என்பவைகளில் பட்டு பிரதிபலிக்குமானால், அங்கே வானவில் போன்று ஒன்று உண்டாகும். அப்பொழுது அந்த தீர்க்கதரிசியும் அவன் உரைத்த வார்த்தையும் சரியானது. இப்படிப்பட்ட முறைமையின் படியே செப்ப்பனங் காண்கிறவன் சரியானவன் என்றும், தீர்க்கதரிசி சரியானவர் என்று அடையாளம் கண்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் ஊரீம், தும்மீம் மீது பட்ட ஒளிக்கற்றையானது பிரகாசிக்கவில்லையென்றால், அது உண்மையான வார்த்தையாய் தோன்றினாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் அந்த ஊரீம், தும்மீம் பிரகாசிக்கவில்லை. 7ஆண்டவராகிய இயேசுவின் மரணத்தினால் லேவிய ஆசாரியத்துவ முறைமை முடிவு பெற்றது. நாம் இப்பொழுது கிறிஸ்து, மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்தும் நமக்கு ஊரீம், தும்மீம் என்பவைகள் இல்லாமல் இல்லை. அது இப்பொழுது நமக்கு வேதாகமமே. பாருங்கள்? ஆகவே நாம் வார்த்தையில் இருக்க வேண்டும். (நம்முடைய சொந்த வியாக்கியானத்தை அதோடு கூட்டாமல்), அதில் எப்படி எழுதப்பட்டுள்ளதோ அப்படியே. ஒரு நாளிலே கர்த்தர் இந்த உலகத்தை இயேசு கிறிஸ்துவைக் கொண்டே நியாயம் தீர்ப்பார் என்று விசுவாசிக்கிறேன். அதை நம்புகிறேன். அப்படியானால் உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கென்று அவர் ஒரு நியமம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்று அநேகர் இன்று உரிமைப் பாராட்டிக் கொள்ளுகின்றனர். 8நான் அயர்லாந்து குடும்பத்திலிருந்து வந்தவன். ஆகவே என் வம்சத்தார் கத்தோலிக்கர் ஆவார்கள். நான் சிறியவனாக இருந்த பொழுது... என்னுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை வாசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கும். புத்தக வடிவில் அவைகள் இங்கே இருக்கின்றன. நான் 'ஐரிஷ்' சபைக்குச் சென்று அந்த: பாதிரியார் சொல்வதைக் கேட்டு வந்தேன். பின்பு, லூத்தரன் சபை போதகர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்க லூத்தரன் சபைக்கு சென்று வந்தேன். எங்களுடைய நாட்களில் ஒரு சின்ன... பாப்திஸ்து சபை அங்கே இருந்தது. எனவே அவர்கள்... பாப்திஸ்து சபைக்கு சென்றேன். பல சபைகளுக்குச் சென்றேன். அவர்கள் எல்லாருமே ஒருவரிலிருந்து, ஒருவர் வித்தியாசம் கொண்டு இருந்தனர். ஒவ்வொருவரும், அவரவர் சபையே மிகவும் சரியானது என்று சொல்ல விரும்பினவர்களாய் இருந்தனர். ஆகையால், இப்பொழுது, அவர்கள் எல்லோரும் சரியாக இல்லை, அவர்கள் எதிலாவது எங்கேயாவது தவறாக உள்ளனர். நான் இப்பொழுது கண்டுபிடித்தது அங்கே தொள்ளாயிரம் வித்தியாசமான ஸ்தாபனங்கள் உள்ளன, ஆகவே அவர்கள் எங்கோயோ எதிலாவது தவறாக உள்ளனர். எல்லோரும் சபைக்கு சென்றாலும் அதினால் ஏற்படுவது... 9இப்பொழுது கத்தோலிக்கர்கள் ஆகிய நாங்கள் சொல்வது, “தேவன் அவருடைய சபையில் இருக்கிறார்”. எங்கே தேவன் இருக்கிறார் என்றால், அவருடைய சபையில் இருக்கிறார். எந்த ஒரு சபை அவருடைய சபை? ஒவ்வொவரும் சொல்வது அதுதான் சபை. இதிலிருந்து நான் ஒன்று அறிந்தது... இப்பொழுது பேராயர் என்ன சொல்கிறாரோ, “தேவன் அவருடைய சபையில் இருக்கிறார்” ஆனால் வேதாகமம் சொல்வது, “தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார்.” மேலும் அவர் சொல்வது, என்னவென்றால், “யாராவது இதில் எதையாவது கூட்டினாலும், அல்லது எதையாவது வெளியே எடுத்தாலும், அவனை ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துவிடுவேன்”. தேவனுடைய வார்த்தையானது அச்சடிக்கப்பட்ட வடிவத்தில் உள்ளது என என்னுடைய முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். ஏன் இதை சொல்கிறேன் என்றால் வார்த்தையை காட்டிலும் எந்த மனிதனும் மேலானவன் இல்லை, வார்த்தையை காட்டிலும் மேலானது ஒன்றும் அவன் இல்லை. எதற்காவது என்னுடைய வார்த்தையை எடுக்காவிடில், அப்பொழுது என்னுடன் எந்த உடன்பாடும் இல்லை, பாருங்கள், ஏனெனில் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை. அதே விதத்தில், நான் செய்வது என்னவென்றால் தேவனுடைய வார்த்தை இதுதான் என்று விசுவாசிப்பது. 10இப்பொழுது வேதாகமம் சொல்வது, புனித யோவான் 1-ம் அதிகாரம், “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் செய்கிறது,” அப்பொழுது அவரே கிறிஸ்து, கிறிஸ்துவே வார்த்தை. எனவே கிறிஸ்துவைக் கொண்டு தேவன் நியாயம் தீர்ப்பாரானால் அது வார்த்தையின் மூலமாகவே இருக்க வேண்டும், பாருங்கள். நம்முடைய விசுவாசமும் நாம் கற்றுக் கொடுத்தலும் இவ்விதமாகவே இருக்கிறது. சற்று நேரத்தில், வெகு விரைவில் நாம் இந்த இடத்தை விட்டு சென்றுவிடலாம்... நீங்கள் சாதாரணமாக இங்கிருந்து எப்பொழுது வெளியே செல்வீர்கள்? சுமார் இரண்டு மணியளவிலா? ஊ ஊ? இரண்டு மணிக்கா? இவர்கள் சிரிக்கிறார்கள். ஒன்பது மணி அல்லது ஒன்பது முப்பது மணியே வெளியே செல்லும் நேரம். அப்படியானால் இன்னும் ஏறக்குறைய முப்பத்தைந்து நிமிடங்கள் உள்ளன. 11இன்று இரவில் உங்கள் மத்தியில் நான் அந்நியனாக இருப்பினும், ஒரு அந்நியன் என்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை. நான் உங்களுடைய சகோதரன் என்று உணருகிறேன். நான் வேதத்திலிருந்து கூறும் வார்த்தைக்கு நீங்கள் செவி கொடுக்க வேண்டும் என வாஞ்சிக்கிறேன். எனவே, செய்தியானது நீங்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் முழுவதும் வித்தியாசமானதாக இருக்கும், அதை நீங்கள் வேதத்தோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் கேட்ட செய்தியுடன் அது ஒத்திருக்கும். வேதத்திலிருந்து அவைகளை வாசித்து அதை வியாக்கியானப் படுத்தாமலே விட்டுவிடுவேன். வார்த்தையானது தனக்குத்தான் வியாக்கியானம் அளிக்க விட்டுவிடுவேன். அது ஒரு பொருளை விற்பது போல், விற்பதற்கென்று ஒரு பொருளை வைத்திருந்தால், அது நல்ல பொருளாய் இருந்தால், தானாகவே விற்றுவிடும். அதை விற்பதற்கு அதிக விளம்பரம் தேவையில்லை. விளம்பரங்களை நான் அதிகம் கேட்டுள்ளேன். நான் சுற்றி வந்தபோது, ஒவ்வொரு மனிதனும், ''இந்த மணி நேரத்திற்குரியவன் நானே'' என்றும் “இதுவே அந்த செய்தி'' எனவும் விளம்பரம் செய்வதை நான் கேட்டிருக்கிறேன். முடிவில், யார் அந்த மனிதன்? என்று அதிசயித்திருக்கிறேன். ஓ, இந்த மணி நேரத்திற்குரியவர் கிறிஸ்து என்று விசுவாசிக்கிறேன்... எப்பொழுதும் அது அப்படியே இருந்து வந்திருக்கிறது. எனவே மிகுந்த பகட்டுப் போன்றவை அவசியமில்லை. ஒரு சமயம் ஒரு விளம்பரத்தைப் பார்த்து எனக்கு போதும் என்றாகிவிட்டது. இதை சகோதரிகளுக்கு சொல்லுகிறேன்... எனக்கு ஒரு மனைவி உண்டு. அவள் இப்பொழுது நம் மத்தியில் இருக்கிறாள். உண்மையாகவே, என் மனைவியையும் பிள்ளைகளையும் நான் நேசிக்கிறேன். அவர்களுக்கு எப்பொழுதும் உதவி செய்ய விரும்புவேன். ஆனால் உதவி செய்வதில் நான் கைத்தேர்ந்தவன் அல்ல. அவளுக்கு வீட்டில் அதிக வேலை என்று எனக்குத் தெரியும், குழந்தைகளை படுக்கையில் படுக்க வைக்க. ஆயத்தப்படுத்துவதிலும் மற்றுமுள்ள காரியங்களையும் அவள் கவனிக்க வேண்டியதாய் இருக்கும். எனவே தட்டுகளை கழுவுவதில் உதவலாம் என்று எண்ணினேன். உங்களைப் போலவே எனக்கும் தட்டுகளை கழுவுவதில் பிரியமில்லை. இருப்பினும் அப்படி உதவி செய்வது நல்லது என்று எண்ணினேன். 12நான் சிறியவனாக இருந்தபொழுது, அம்மா என்னை ஒரு சின்னப் பெட்டியின் மேல் தட்டுகளை கழுவுவதற்கென்று நிற்க வைப்பது வழக்கம். அப்பொழுதெல்லாம் நான் நினைப்பேன், “நான் திருமணம் செய்த உடனேயே இந்த பழக்கத்தை விட்டுவிடுவேன்'' என்று. ஆனால் இப்பொழுதோ என்னுடைய அம்மாவை நேசித்த விதமாகவே என் மனைவியையும் நேசிக்கிறேன். அங்கே அவர்கள் என்னுடைய அம்மா, இங்கே இவள் என் மனைவி, அவ்வளவுதான் வித்தியாசம். நல்லது, அப்படியானால் என்னால் முடிந்த உதவியை செய்ய எண்ணினேன். ஒரு சமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. வெளிநாடு செல்வதற்கு விமானத்திற்காக அங்கே காத்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. முன் பக்கத்தில் பரந்த ஒரு பகுதி. அதில் பெரிய கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. அந்த தொலைக்காட்சி இந்த விதமாக அறிவித்தது. ''இந்தக் குறிப்பிட்ட 'கழுவும் பொருளை' (Detergent) உபயோகியுங்கள்; கழுவ வேண்டுவதில்லை; தண்ணீர் ஊற்றி குலுக்க வேண்டுவதில்லை; துடைக்க வேண்டியதில்லை; ஒன்றுமே செய்ய வேண்டாம். சும்மா தண்ணீரில் போட்டு, மூழ்கவிட்டு, பின்னர் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டும்!'' ''தட்டுகளை எப்படி கழுவ வேண்டுமென்று அவளுக்கு காட்டப் போகிறேன். இது முதல் அவள் என்னை உண்மையாகவே அதிகமாக நேசிப்பாள்'' என்று எண்ணினவனாய்... எனவே, அடுத்த நாள் நான் வீடு சென்றபொழுது ஒரு பெட்டி கழுவும் பொருளோடு சென்றேன். வீடு சென்றடைவதற்கு முன்னதாகவே ஒரு பெட்டியை வாங்கி அதை என்னுடைய மேல் சட்டை (Coat)க்கு உள்ளே வைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். 13அடுத்த நாள் காலையில், “அன்பே, கவலைப்படாதே. உனக்காக நான் தட்டுகளைக் கழுவ ஆயத்தமாய் இருக்கிறேன். இவ்வளவே நாம் செய்ய வேண்டும். தட்டுகளை இயந்திரத்தில் போட்டு அதை ஓட்டிவிட்டு கழுவத் தொடங்கிவிடலாம். அலுவலகத்திற்கு செல்லும் முன்னரோ அல்லது நான் அழைக்கப்பட்ட இடத்திற்கு செல்லும் முன்போ, உடனடியாக - ஒரு நொடிப்பொழுதில் தட்டுக்கள் அனைத்தையும் கழுவப்பட்டவையாக பெற்றுவிடுவேன்'' என்றேன். ஆகவே அதை எடுத்து, அதன் மேலே எழுதி இருப்பதை வாசித்தேன். என்ன எழுதி இருந்தது தெரியுமா? ''இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்துப் போடவும்,'' என்னே! இந்தப் பொருளை வைத்தே என் பணியை முடித்து விடுவேன் என்று எண்ணினேன். பெட்டியில் இருந்த பாதியைக் கொட்டினேன், அதேபோல் கலக்கினேன். எல்லா தட்டு முட்டுகளையும் எடுத்து அதற்குள்ளே போட்டேன். அந்த மட்டத்திற்கு சோப்பு நுரை வந்தது. ''பிள்ளைகளே, இப்பொழுதிலிருந்து இன்னும் சில வினாடிகள் தான் இருக்கிறது. பின்பு நான் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவைகளை வெளியே எடுத்து மேசை மீது மறுபடியும் வைக்க வேண்டும்.'' அவ்வளவே நான் செய்யவேண்டும் என எண்ணியிருந்தேன். குழந்தைகள் தட்டில் காலை உணவின்போது முட்டைகள் சாப்பிட்டிருந்தனர். நான் அவைகளை இழுத்தபொழுது அதற்கு முன்பு எவ்வளவு முட்டைகள் ஒட்டிக் கொண்டிருந்ததோ, அது அப்படியே ஒட்டிக் கொண்டிருந்தது. எனவே, அன்று முதல் எந்த ஒரு பொருளும் மிகுந்த அளவில் விளம்பரம் செய்யப்படுவதைப் பார்த்தால், அங்கிருந்து கடந்து சென்றிடுவேன். அதைக் குறித்து அலட்டிக் கொள்வதில்லை, ஏனென்றால், அவர்கள் விளம்பரப்படுத்துவது போலவே அது வேலை செய்வதில்லை. 14ஜனங்கள் பார்க்கும்படி, இயேசுவைக் குறித்து, “அவர் யார்? அவர் என்னவாக இருந்தார்? யாராக என்னவாக இருந்தார் என்பதை மட்டும் பேசினால் போதும், மற்றக் காரியங்களை அவர்செய்து முடித்துவிடுவார்,'' என்று சில சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரே அவரை வெளிப்படுத்துவார். ஏனென்றால், ”பிதா எனக்குக் கொடுத்தவைகள் எப்படியும் என்னிடத்தில் வரும்.'' பாருங்கள், அப்படித்தான் இயேசுவும் சொன்னார், ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்.'' எனவே நாம் என்ன செய்கிறோம் என்றால், விதையை விதைத்து, விட்டுவிடுகிறோம், இப்பொழுது, நீங்கள் தொலைபேசிக்குச் சென்று, ஜனங்களைக் கூட்டத்திற்கு அழைப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்பொழுது வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது இங்கு முக்கியமல்ல. அப்படி ஜெபிப்பது என்பது இந்த கூட்ட ஒழுங்கில் ஒரு பகுதியே ஆகும். ஆனால் ஒவ்வொரு பாவியையும், ஆண்டவராகிய இயேசுவே இரட்சகர் என்று அறியச் செய்வதுதான் முக்கியமானதாகும். ஆம், அதுதான் முக்கியம். இரண்டாவதாக, கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாதவர்கள், அப்படிப்பட்டவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்பும்படிக்கு செய்வது நமது இரண்டாம் நோக்கம். மூன்றாவதாக, கூடுமானவரையில் எல்லா வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது, இதன் மூலமாக கர்த்தர் இந்த கூட்ட நேரத்தில், ஒரு சிறந்த தருணத்தை அருளிச் செய்வார் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாள் மாலையிலும், பின்னர், ஞாயிற்றுக் கிழமை மத்தியான நேரத்திலும் இக்கூட்டங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். 15இங்கு என்னை அழைத்த சகோதரர்களுக்கு, ஊழியக்காரர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். மேலும் இங்கு கூடி வரும்படிக்கு என்னை வழி நடத்தின தேவனுக்கும் நான் நன்றி கூறுகிறேன். இப்பொழுது இங்கிருக்கும் மேலாளர் திரு. பார்டர்ஸ் உலகத்தின் சுற்றிலுமிருந்து வந்த அழைப்புகள் நிறைந்த புத்தகம் ஒன்று வைத்துள்ளோம். ஆனால், ஏதோ ஒன்று, ஏதோ ஒரு வகையில் கிராஸ் பள்ளத்தாக்கை குறித்து பேசினது. உடனடியாக, என் நண்பரில் ஒருவர், கீழே லாஸ் ஏஞ்சல்ஸின் சுற்றுப்புறத்திலிருக்கும் ஆர்கன் பிரைட் குடும்பத்தினர் என்னை அழைத்து ''வெளியிடத்திற்கு சென்று ஊழியம் செய்ய பிரயாணத் திட்டம் இன்னும் முழுமையாகப் பெறவில்லை. கிராஸ் பள்ளத்தாக்குக்கு போனால் நலமாயிருக்கும்'' என்றார். தொலைபேசியில் மேலாளரோடு தொடர்பு கொண்டு, “இதற்கு முன்பு அங்குச் சென்றிருக்கிறீர்களா?'' என்று வினவினேன். அவர் “இல்லை'' என்றார். ''அப்படியானால் அங்கு வாருங்கள்'' என்றேன். அதன் விளைவாக இப்பொழுது உங்கள் மத்தியிலே நாங்கள் இருக்கின்றோம். கர்த்தர் இப்பொழுது என்ன செய்யப் போகிறார் என்று எனக்கு தெரியாது. அவர் இங்கு இருக்கும் ஒரே ஒரு மனிதனுக்காக வரலாம். ஆனால் முழு சமுதாயத்திற்காக அவர் வருகிறார் என்று நம்புகிறேன். இந்த அடிப்படையில், இப்பொழுது அவருடைய வார்த்தையை வாசிக்கும் முன்பு, இந்த புத்தகத்தின் ஆசிரியரோடு பேசும்படி நம் தலைகளைத் தாழ்த்துவோம். 16எங்கள் பரலோகப் பிதாவே, உலக சரித்திரம் முடியும் தருவாயில் “அப்பா'' என்றழைக்க உம்முடைய பிரசன்னத்தில் நிற்பதை உண்மையாக சிறந்த சிலாக்கியமாக கருதுகிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து சொன்னது போல ''நீங்கள் என் நாமத்தினால், பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை அவர் உங்களுக்கு தருவார். நான் உங்களுக்கு அதை செய்வேன்'' என்ற ஆசீர்வாதமான வாக்குத்தத்தத்தை நம்பி, எல்லாவற்றிற்கும் போதுமானவராக இருக்கிறீர் என்று அறிந்தவர்களாய் உம்முடைய சமுகத்தில் வருகிறோம். பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் விண்ணப்பிக்கும் போது, அவைகள் அருளிச் செய்யப்படும் என்று அறிந்திருக்கிறோம். இப்பொழுதும் உம்முடைய சித்தத்திற்குப் புறம்பாக எதையும் நாங்கள் கேட்க விரும்பவில்லை. நாங்கள் இங்கே இருக்கும்படி வழிநடத்தினவர் ஜனங்களை இரட்சிக்கவும், அவர்களை சுகப்படுத்தவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பியும் உமக்கு மகிமையை ஏறெடுக்கிறவராய் இருக்கிறீர் என்றும் விசுவாசிக்கிறோம். நாங்கள் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீரோ, அதை செய்வதற்கு நாங்கள் இங்கு இருக்கிறோம். எனவே, பிதாவே, உம்முடைய வார்த்தையையும் வார்த்தையோடு கூடிய உம்முடைய சித்தத்தையும், உம்முடைய வார்த்தையின் சித்தம் என்னவென்பதை நாங்கள் அறியும்படிக்கு எங்களுக்கு வெளிப்படுத்தும் என்று ஜெபிக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னித்து, எல்லோரையும் ஒருமுகமாய் ஆசிர்வதியும். 17இந்த இரவிலும் இந்தக் கட்டிடத்திற்குள் நாங்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கும் பொழுது இந்த கட்டிடத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம். தேவனே, இது ஒரு அரங்கமாக இருப்பினும் இது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மதிப்பும், அன்பும், எல்லா கனமும் அவருக்கே செலுத்துவதற்கு இது தேவனுடைய ஆலயமாய் இருக்கிறது. தேவனே, இந்த ஐந்து அல்லது ஆறு நாட்களிலும் இந்த அரங்கத்தின் வாசல் வழியாய் பிரவேசிக்கிறவர்களின் இருதயம் பாவ உணர்வால் குத்தப்பட்டு தங்கள் இருதயங்களை கிறிஸ்துவுக்கு ஒப்புக் கொடுக்காதபடிக்கு திரும்பி வெறுமையாய் செல்லாதபடி அருள் செய்வீராக. பிதாவே, இந்த கட்டிடத்திற்குள், வியாதிப்பட்டவர்களாய், நடமாடுகிறவர்களையும், நோயுற்றோரை குணமாக்க இங்கு உள்ளவர் தங்கள் இருதயங்களில் ஜெபித்துக் கொண்டிருக்கிற மற்றவர்களையும் சுகப்படுத்த, ஆசிர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசு இங்கு பிரசன்னராயிருக்கும்படி ஜெபிக்கிறோம். ஒவ்வொருடைய இருதயத்தையும் பரிசுத்த ஆவியினால் நிரப்புவீராக. 18மேலும் தேவனே, காலம் கடந்து செல்வதற்கு முன்பாக, பர்வதங்கள் எல்லாம் சமமாகும் முன்பு, அவிசுவாச சந்ததியின் மேல் கர்த்தருடைய கோபம் ஊற்றப்படுவதற்கு முன்னர், குடியிலும், பாவத்தில் நிறைந்து விபச்சாரத்தில் பைத்தியமாயும், உலக மகிமையின் மேல் உள்ள பற்றிலும், ஜீவிப்பவர்களை உம் பக்கமாக இழுத்துக் கொள்வீராக. தேவனே, நாங்கள் பார்க்கும்படியாகவும், எங்கள் இருதயம் முழுவதும் நிரம்பும்படியாகவும், இங்கு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தங்கள் தெருவிலும், பக்கத்து வீட்டிலும், மற்றவர்களையும் கிறிஸ்துவுக்கென்று கொண்டு வரத் தக்கதாக ஒவ்வொருவரையும் ஊழியக்காரராய் ஆக்கும் பொருட்டு இந்த வாரத்தில் எங்களுக்கு அருகாமையில் கடந்து வாரும். நீர் வருவதற்கு முன்னரே இந்த எழுப்புதல் கூட்டத்தை முடித்திருப்போமோ? அல்லவோ? எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாளில் நீர் வருவீர் என்று மட்டும் தெரியும். அது எந்த மணி நேரமாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு மணிநேரமும், அந்த நேரம் இதுவே என்று உணர்ந்தவர்களாய், உம்முடைய பிரசன்னத்தில் வந்து நிற்பதற்கு ஆயத்தப்பட்டவர்களாய், “நல்லது, உண்மை யும் உத்தமமும் உள்ள ஊழியக்காரனே, உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே ஆயத்தமாக்கப்பட்டிருக்கும் ஆண்டவருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி'' என்று சொல்வதை கேட்கும்படியாகவும் ஜீவிக்க செய்யும். எங்களையும் இந்தக் கூட்டத்தையும் உம்முடைய வார்த்தைக்கென்று, உம்முடைய மகிமைக்காகவும், கனத்திற்காகவும் இயேசுவின் நாமத்தில் அர்ப்பணிக்கிறோம். ஆமென். 19தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. இப்பொழுது பரி. யோவான் எழுதின சுவிசேஷம் 12 ஆம் அதிகாரம் 20 வது வசனத்தை வாசிக்க விரும்புகிறேன். மேலும் நம்முடைய பொருள் இதுவே. கண்ணீர் துளி... நம்முடைய முகாமின் பொருள் (Theme) “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்பதே. அது எபிரெயர் 13:8-இல் இருக்கிறது. ''இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' இப்பொழுது பரி. யோவான் 12:20. பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து, ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று கேட்டுக் கொண்டார்கள். 20அடுத்த சில நிமிடங்களுக்கு இந்த வசனத்தை பின்னனியாக வைத்து வழக்கமாக செய்யும் மரபின்படி சிறிய பிரசங்கம் செய்ய விரும்புகிறேன். முன்பு போலவே தெய்வீக சுகமளித்தலை ஆரம்பிக்கப் போகிறோம். இயேசுவின் ஊழியத்திலும் எண்பது சதவீதம் தெய்வீக சுகமளித்தல்தான் என்று நம்புகிறேன். சகோ. போஸ்வர்த் என்பவரை, கிறிஸ்தவர்களாகிய உங்களில் அநேகர் அறிந்திருக்கிறீர்கள். அவர் என்னுடைய அருமையான பழைய நண்பர் ஆவார். அவர் இப்படியாக சொல்வதுண்டு. ''எப்பொழுதும், மீன்பிடிக்க வேண்டுமானால், தூண்டில் முள்ளை காட்டாதே. தூண்டில் இரையை மட்டுமே காட்ட வேண்டும். அப்பொழுது மீனானது இரையை கவ்விப்பிடிக்க முயலும்போது, தூண்டில் முள்ளில் சிக்கிவிடும்'' என்று. இப்படித்தான் கிறிஸ்தவர்களை, கிறிஸ்துவுக்கென்று பிடிக்க, அவருடைய பிரசன்னத்தை ஜனங்களை உணரச் செய்ய, தெய்வீக சுகமளித்தல் என்னும் அற்புதத்தின் மூலமாக முயற்சி செய்கின்றோம். அந்த அற்புதங்கள் நடக்கும் போது, ஒரு மனிதன் இப்படிப்பட்டவைகளை செய்ய முடியாது என்று அறிகின்றார்கள். இந்த அடிப்படையில் விசுவாசிக்கிறவனின் ஆத்துமாவை அது பிடித்துக் கொள்ளுகிறது. அந்த அடிப்படையில் அவன் அதை ஏற்றுக் கொள்கிறான். எனவே தொடங்குவதற்கு முன்னதாக, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று கூற விரும்புகிறேன். “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகின்றோம்'' என்று அந்த கிரேக்கர்கள் கேட்டார்கள். 21இந்த இரவிலே நாம் விரும்புவதையே அந்த கிரேக்கர்களும் சரியாக பிரதிபலித்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை காண வேண்டும் என்று விரும்பாத ஒரு மனிதன் கூட இங்கே இல்லை என்று விசுவாசிக்கிறேன். அவரைக் குறித்து கேள்விப்படாதவர்கள், இன்று அவரை காண வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்பதை அறியும்படி உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள், நூற்றுக்கு நூறு பேர் அவரை குறித்து கேள்விப்பட்டு இருக்கிறீர்கள். அவரைக் குறித்து கேள்விப்படாதவர்கள் யாருமே இங்கு இல்லை. அந்த கவர்ச்சிகரமான பெயர் அவரைக் காண வேண்டும் என்னும் விருப்பத்தை உண்டாக்குகிறது! மற்ற மனிதர்களிடத்தில் இல்லாத விசேஷித்த தன்மை கிறிஸ்துவுக்கு உண்டு. அவர் வித்தியாசமானவராக இருந்தார். அவர் தேவனுடைய குமாரன். மற்றவர்களிடத்தில் காணப்படாத விசேஷித்த தன்மைகளை இவர் பெற்றிருந்தார். அதுவே அவரை வித்தியாசமுள்ளவராக்கிற்று. இவைகளை புரிந்துக் கொள்ள பரிசுத்த ஆவியை நாம் பெற்றிருக்கிறோம். அவற்றை நாம் ஓர் அளவோடு தான் பெற்றுள்ளோம். அவர் அளவில்லாமல் ஆவியை பெற்றிருந்தார். (அவர் இம்மானுவேல்) கிறிஸ்து இயேசுவின் சரீரத்தில் தேவன் வாசம் பண்ணினார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். கிறிஸ்து தேவனுடைய தற்சொரூபமாய் இருந்து (express image) ஜனங்களுக்கு தேவனை வெளிப்படுத்திக் காட்டினார். தேவன் யார் என்பதை அவர்கள் அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் கண்டார்கள். அவர் அபிஷேகம் பண்ணப்பட்டவர், “கிறிஸ்து'' என்ற சொல்லுக்கு ”அபிஷேகம் பண்ணப்பட்டவர்'' என்று பொருள். 22அந்த கிரேக்கர்கள் அவரைக் காண வேண்டுமென்று தேடி இருப்பார்களானால்... நாம் இப்பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பார்ப்போம். அந்த கிரேக்கர்கள் இயேசுவை தேடினவர்களாய் அவருடைய சீஷர்களில் ஒருவனான பெத்சாயிதா பட்டணத்தானாகிய பிலிப்பு என்பவனிடத்தில் வந்தார்கள். அவனும் இயேகவைக் காண மற்றொரு சீஷனிடத்தில் சென்றான். அவன் பிலிப்புவை இயேசுவினிடத்தில் கூட்டிக் கொண்டு போனான். இயேசுவைக் காண அந்த கிரேக்கர்களுக்கு அதுவே வழியானால், அதே இயேசுவை நாமும் காண வாஞ்சிக்கிறோம். “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்'' என்று வேதம் சொல்லுகிறது. நாம் ஏன் அவரைப் பார்க்க முடியாது? இப்பொழுது நீங்கள்... வேதம் பொய்யுரையாது. அவைகள் சத்தியம். நான் அதை நம்புகிறேன். வேதம் தவறாயிருக்குமானால், இந்த ராத்திரியிலே உங்கள் மத்தியிலே நின்றுக் கொண்டு பிரசங்கிப்பதற்கு பதிலாக வேறு எதையாகிலும் செய்துக் கொண்டிருப்பேன். ஆனால் வேதம் சரியானது, மிகவும் சரியானது என்று நம்புகிறேன். அவைகளுக்கு எந்தவித வியாக்கியானமும் தேவையில்லை. அவைகள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இருக்கிறது. அது அப்படியே இருக்க வேண்டும் என்று தேவன் கவனம் செலுத்தி இருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். 23உங்களில் எத்தனை பேர் தேவன் முடிவற்றவர், சர்வ வல்லவர், சர்வ வியாபி, சர்வ ஞானி என்று விசுவாசிக்கிறீர்கள்? நிச்சயமாக. அவர் தேவனாய் இருக்கிறார். ஆகவே ஆரம்பத்தில் அவர் என்ன தீர்மானம் செய்கிறாரோ, அதுவே என்றென்றும் நிலை நிற்கும். ஏனென்றால் அவருடைய முடிவு நிறைவானது. அவர் நிறைவானதை தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாது. அவர் நிறைவுள்ளவர். அவ்வளவே. அவர் ஒருபொழுதும் மாறாதவர். இப்படிப்பட்ட வார்த்தையில் தான் நம்முடைய நம்பிக்கை கட்டப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காரியத்தில் தீர்மானம் எடுப்பதற்கென்று, தேவன் காட்சியில் தோன்றுவாரானால், அவர் முதலாவதாக எடுக்கும் முடிவு நித்திய நித்தியமாய் மாறாததாய் இருக்கும். அது ஒருபோதும் மாறாது. நாம் இந்த கருத்துக்கு வருவதற்கு முன்பாக இந்த காரியத்தை சற்று சிந்தித்து பாருங்கள். 24தேவனாகிய கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் இருந்த போது ஆதாம், ஏவாளை இரட்சிப்பதற்கு அவருக்கு ஒரே ஒரு பிராயச்சித்தமே உண்டாயிருந்தது. அது தான் இரத்தம். அதை அவர் ஒருபோதும் மாற்றவில்லை. அது எக்காலத்தும் இரத்தமாகவே இருந்து வருகிறது. அவர் அதை மாற்ற முடியாது. ஒரு நோயாளியை குணமாக்க தேவன் அழைக்கப்பட்ட போது அவனுடைய விசுவாசத்தின் மூலமாகவே அவனை குணமாக்கினார். அதை அவர் மாற்றவே முடியாது. பாருங்கள்! கர்த்தரிடத்தில் வைத்திருந்த விசுவாசத்தின் மூலமாக அந்த ஒரு மனிதன் சுகமாக்கப்படுவானானால், அதே அடிப்படையில் தான் மற்ற ஒருவனையும் அவர் சுகமாக்க வேண்டும். அப்படி அவர் சுகமாக்கவில்லையென்றால் முதலில் சுகமாக்கிய பொழுது அவர் தவறு செய்தவராவார். முதலாமவனை இரட்சித்த பொழுது, அவர் தவறு செய்துள்ளார் என்றே அர்த்தம். பாருங்கள்! ஆகவே நீங்கள்... அடிக்கடி நாம் மாறுபவர்களாக இருக்கிறோம். நாம் ''முடிவுள்ளவர்கள்'' என்று அழைக்கப்படுகிறோம். அவரோ நித்தியமானவர், அவர் பரிபூரணமுள்ளவர். ஆதலால் அவர் அதை மாற்றிக் கொள்ள முடியாது. நாம் முடிவு செய்த பின்னர் அது தவறாக இருக்குமானால் ''இதைவிட சிறப்பாக, வேறு வகையாய் மாற்றிச் செய்வேன்'' என்று இப்படிப்பட்ட எண்ணம் உடையவர்களாய் இருக்கிறோம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. முதலில் என்ன செய்கிறாரோ அதுவே பரிபூரணமானது. அதுவே நித்திய நியமமாக இருக்க வேண்டும். ஆகவே அவர் நம்மைப்போல ஒரு காரியத்தைச் செய்து அதன் மூலமாக அறிவையோ, படிப்பினையோ பெற்றுக் கொள்வது கிடையாது. தொடக்கம் எதுவோ, அது பரிபூரணமாக இருக்கும். அவர் பரிபூரணமுள்ளவர். 25இந்நாட்களில், நாம் சென்ற இடமெல்லாம் இயேசுவை குறித்து அதிகமாய் கேள்விப்படுகிறோம். நான் ஒரு மிஷனரி. புரிந்துக் கொண்டீர்களா? உலகத்தை ஏழாவது முறையாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். சுவிசேஷ பணித்தளங்களில் நாங்கள் சந்திக்கும் மக்களில் கோடிக்கணக்கானோர் விக்கிரக ஆராதனை செய்கிறவர்களாக இருக்கின்றனர். ஆனால் இங்கே அமெரிக்காவில் ஒவ்வொரு மூலையிலும் தேவாலயங்களைக் காண்கின்றோம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் தேவனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடையே எத்தனையோ விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. சிலர் கர்த்தரை கண்டடைய ஒரு வழியில் செல்கின்றனர். வேறு சிலர், வேறு வழியில் அவரை கண்டடைய முயற்சி செய்கின்றனர். உண்மையாகவே எங்கோ ஓர் சரியான வழி உண்டு. அந்த சரியான வழி எங்கேயாவது இருக்கத்தான் வேண்டும். தாவீது சொல்வது போல, ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறபோது அந்த சத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே ஓர் ஆழம் உண்டாயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த அழைப்பின் சத்தம் அங்கே உண்டாயிருக்காது. வேறு வகையாய் சொன்னால், படைப்பு உண்டாவதற்கு முன்னமே படைக்கிறவர் இருக்க வேண்டும். பாருங்கள்? ஏதோ ஒன்று முன்பே படைப்பை உங்களில் வைத்துவிட்டது - படைக்கிறவர் உங்களில் படைப்பை உண்டு பண்ணியிருந்தால். எனவே ஏதோ ஒன்று அதற்கு பதில் அளித்து ஆகவேண்டும். மீனின் பின்பக்கத்தில் செதில்கள் உண்டாவதற்கு முன்பே அது நீந்துவதற்கென்றே தண்ணீர் உண்டாயிருக்க வேண்டும். இல்லையென்றால் மீனுக்கு செதில்கள் இருந்திருக்காது. ஒரு மரம் மண்ணிலே வேரூன்றி வளருவதற்கு முதலில் மண் உண்டாயிருக்க வேண்டும். மனித இருதயத்திலே தேவனை தேடுகிற தாகம் இருக்குமட்டும் அந்த தாகத்தின் சத்தத்திற்கு பதில் கொடுக்கிறவராய் எங்கோ ஓரிடத்தில் ஆண்டவர் இருக்க வேண்டும்! இங்கு இந்த இரவிலே உங்களில் அநேகர் தெய்வீக சுகமளித்தலை நாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் அதை நீங்கள் நாடுகிறீர்கள்? ஏனென்றால் உங்களுக்குள் ஏதோ ஒன்று இருந்துகொண்டு, ''எங்கோ ஒரு ஊற்று இருக்கிறது'' என்று சொல்லுகிறது. பாருங்கள்! உங்களில் இருக்கிற ஏதோ ஒன்று, “எங்கோ ஒரு ஊற்று இருக்கிறது'' என்று சொல்லிக் கொண்டிருக்கும் மட்டும், அங்கே ஒரு ஊற்று உண்டாயிருக்க வேண்டும். அப்படி இல்லாதிருக்குமானால், அப்படிப்பட்ட தாகம் உங்களுக்கு உண்டாயிருக்காது. பாருங்கள், படைக்கிறவர் படைப்பை உண்டு பண்ணுகிறவராக - உருவாக்குகிறவராக இருக்கிறார். 26இந்நாட்களில் ஜனங்கள் வாஞ்சிக்கிறவர்களாய், இழுப்புண்டவர்களாய் இங்கும் அங்கும் ஓடி தவிக்கிறவர்களாய், சபைகளை மாற்றியும், தாங்களை மாற்றியும், ஸ்தாபனங்களை மாற்றுகிறவர்களுமாய் இருக்கின்றனர். ஏன், என்ன காரணம்? ஏதோ ஒன்றிற்காக அவர்கள் பசியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்காக பசியுள்ளவர்களாக இருக்கிறார்களோ, அதை கண்டு பிடிக்க முடிவதில்லை. அந்த 'ஒன்று' எங்கோ உண்டாயிருக்க வேண்டும். இன்றைக்கு அநேகர் தங்கள் சொந்த கோட்பாடுகளால் தேவனைத் தேடுகிறவர்களாக இருக்கின்றனர். அநேகர் அவர்களுடைய கோட்பாடுகள் மூலமாகவே தேவனைக் காணலாம் என்று எண்ணுகின்றனர். சிலர், ''குறிப்பிட்ட ஸ்தாபனங்களை சேர்ந்துக் கொண்டால் தேவனை கண்டுவிடலாம்'' என்று நினைக்கிறார்கள். 27நல்லது. இயேசு இந்த பூமிக்கு வந்த போது இதையே தான் பார்த்தார். அவர் பரிசேயர், சதுசேயர் இன்னும் பலரைக் கண்டார். பலதரப்பட்ட ஒழுங்குகள் அல்லது சபை அமைப்புக்கள். அந்த நாளுக்குரிய கோட்பாடுகள், இவைகளைத்தான் அவர் கண்டார். அவர் அவர்களிடத்தில் என்ன சொன்னார் தெரியுமா? ''உங்களுடைய பாரம்பரியத்தினால், நீங்கள் தேவனுடைய கற்பனையை அவமாக்குகிறீர்கள்.'' பாருங்கள்? சொந்த கோட்பாடுகளின் மூலமாகவோ அல்லது ஸ்தாபனங்களின் மூலமாகவோ தேவனை தேடுவது என்பது, அது ஒரே ஒரு காரியத்தை - மனிதன் அறிந்து கொள்ள இயலாத குழப்பத்தை மட்டுமே செய்யும். அது பின்னோக்கிச் சென்று வார்த்தையை மறுதலிக்கும். இன்னும் பின்னோக்கிச் சென்று தேவனுடைய கற்பனைகளை அவமாக்கிவிடும். உதாரணமாக, ''அப்போஸ்தலருடைய பிரமாணத்தை உச்சரித்து தேவனை கண்டடைய முயல்கிறீர்கள். பின்னர் மாற்கு 16-ஆம் அதிகாரம், விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன'' என்பதற்கு நீங்கள் வரும்போது அது உண்மையென நீங்கள் அறிந்துக் கொள்கிறீர்கள். அப்பொழுது, ''அற்புதங்கள் நடந்த காலம் முடிந்துவிட்டது'' என்று உடனே உங்களுக்கு சொல்வார்கள். அப்படியானால் அது என்ன செய்கிறது? அவைகள் தேவனுடைய கற்பனைகளை பயனற்றதாக செய்கிறது கர்த்தருடைய கற்பனைகள் பயனற்றவை என்பனவாக. “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்பதே அவருடைய கட்டளை சுவிசேஷமானது வார்த்தையினால் மாத்திரமல்ல; வார்த்தையானது பரிசுத்த ஆவியானவரின் மகத்தான கிரியைகளின் மூலம் வெளிப்பட்டு ஜீவன் பெற்றது. பாருங்கள், ஆவி வார்த்தையை எடுத்துக் கொண்டு அதை உயிர்பெறச் செய்கிறது. 28வார்த்தை சிந்தனையாய் இருந்து அந்த சிந்தனை... சிந்தனை வெளிப்பட்டபோது வார்த்தையாயிற்று. பாருங்கள்? அவர் என்னச் செய்ய போகிறார் என்பது அவருடைய சிந்தையில் இருந்தது, அதை அவர் வார்த்தையாக வெளிப்படுத்தினார். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வார்த்தையைத் தமதாக்கிக் கொண்டு, அந்த வார்த்தையை நிகழச் செய்து அதை வெளிப்படுத்தி, தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றையும் உண்மையென்று நிரூபித்து காட்டுகின்றார். வழங்கப்பட்டிருக்கின்ற தேவனுடைய வார்த்தை அனைத்தும் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவையே! தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும், சரியானதும், பரிபூரணமும் உள்ளது. அது நிறைவேறும். ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற வேண்டும். “வானமும் பூமியும் ஒழிந்து போம், ஆனால் என்னுடைய வார்த்தை ஒருபோதும் ஒழிந்து போகாது'' என்று இயேசு சொன்னார். அதன் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற வேண்டும். கர்த்தர் இந்த விதமாக நிறைவேற்றுவாரானால், நமக்கு சொந்தமான நம்முடைய கோட்பாடுகளை நாம் சொல்வோமேயானால்... நான் அதற்கு விரோதமாக ஒன்றும் கூறவில்லை. கருப்பு மனிதன் சொன்னது போல. தர்பூசனிப்பழம் தின்பதைப் போன்றது. அதன் மெல்லிய துண்டை அவன் தின்றபொழுது, ''மோஸ், இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்றான். அவர், “மிகவும் நன்றாய் இருந்தது. இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்திருக்க வேண்டும்'' என்றார். ஆகவே அவரை அது திருப்திபடுத்துவதாக இருக்கவில்லை. 29கோட்பாடு சரிதான். ஆனால், வார்த்தையை அறிந்து கொள்ளும் மட்டும் அது உன்னை திருப்திபடுத்தாது. “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். மனிதன் அப்படித்தான் வாழவேண்டும். தேவனுடைய வசனம் மனிதனின் அன்றாட ஆவிக்குரிய உணவாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை. அவர்கள் எகிப்திலிருந்த பொழுது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனால் அளிக்கப்பட்டது. ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியிருந்தது. கர்த்தர் யோசுவாவைப் பார்த்து; “உங்கள் காலடி மிதிக்கும் இடத்தையெல்லாம் உங்களுக்கு சுதந்திரமாக கொடுத்தேன்'' என்று யோசுவாவின் புஸ்தகம் முதல் அதிகாரத்தில் சொன்னார். ஆகவே அடிச்சுவடு (காலடி) என்றால் சொந்தம், உடமை என்று பொருள்படும். சிலர் ஒன்றும் இல்லாமலே அந்த தேசத்தின் விளிம்பு வரை சென்றிருக்கலாம். சிலர் தங்கள் இரு கரங்களிலும் ஆயுதம் ஏந்தியவர்களாய் எல்லா இடங்களையும் சுதந்தரிக்கும் மட்டும், எமோரியர்களையும் பெலிஸ்தியர்களையும் வெட்டி வீழ்த்தி பாதை உண்டாக்கிக் கொண்டே சென்றார்கள். அதையே நாமும் செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். எல்லா வாக்குத்தத்தமும் நமக்கே உரியது. அடிச்சுவடுகளை நாம் பெற்றிருக்கிறோம். அடிச்சுவடு என்றால் சுதந்தரித்தல் என்று பொருள். நீங்கள் காலடி வைத்து அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே வாக்குத்தத்தம். அதுவே சத்தியம். அது நமக்கே உரியது. நான் உரைத்தபடி மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிரமாணங்களினாலும் தங்களுடைய பாரம்பரியங்களினாலும் தேவனுடைய கற்பனைகளை பயனற்றுப் போகச் செய்கின்றனர். அது அப்படி அல்ல என்று விளக்கம் தெரிவிப்பதன் மூலம் அதை எடுத்துப் போடுகின்றனர். 30ஆனால் எது சத்தியம் என்று அறிந்து கொள்ள ஒரு வழியுண்டு. ஏனெனில் “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் சொல்லுகிறது. எனவே அந்த வேத வாக்கியங்களை வேதத்தை விட்டு எடுத்துப் போட உங்களால் கூடாது. அதை வேதத்திலேயே விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது வேதத்திற்கு சொந்தமானது. ”அவர் மாறாதவர்'' என்று வேதம் சொல்லுமானால் அவர் சற்றே மாறுபவர் என்று அர்த்தம் கொள்ளாது. “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்'' என்று தான் பொருள். அப்படிப்பட்டவரைக் காண விரும்புகிறோம். இன்று இரவில் இந்தக் கட்டிடத்தினுள் அவர் வருவதைக் காண வாஞ்சிக்கிறேன். அவரைக் காண விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? நான் சற்று முன்பு சொன்னது போல, அவரைக் காண விரும்புகிறோம். அவர் அதை நமக்கு வாக்குத்தத்தம் செய்துள்ள போது, ஏன் அவரைக் காண முடியாது? அது... நம்முடைய கண்களையும் சிந்தையையும் சற்று நேரத்திற்கு திறப்போமேயானால் நாம் புரிந்து கொள்வோம் என்று நம்புகிறேன். அவர் நம் மத்தியில் வந்து நமக்கு அவரை வெளிப்படுத்துவார். அப்பொழுது “நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கூறிக் கொண்டு வீடு திரும்பலாம். 31பழைய ஏற்பாட்டில், இல்லை, புதிய ஏற்பாட்டில் அவரை எங்கே கண்டனர்? வார்த்தையில் தான் அவரைப் பார்த்தனர். ஏனெனில் அவர் வார்த்தையாய் இருந்தார். அவர்கள் தங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட வார்த்தையாக அவர் இல்லை. ஆனால் கர்த்தர் எந்த விதமாக அமைத்துள்ளாரோ, அதில் அவர் இருந்தார். ஏனெனில் அவர் ஜீவனுள்ள வார்த்தையாய் இருந்தார். பிசாசானவன் அவரை சோதித்த பொழுது, அவர் வார்த்தையிலே தான் அவனை சந்தித்தார். அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவன், ஆனால் அவர் பிசாசானவனை எதிர்க் கொண்ட போது அவர் கர்த்தத்துவத்தின் வல்லமையை ஒருபொழுதும் பிரயோகிக்கவில்லை. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, என்று எழுதியிருக்கிறதே'' என்றார். ”உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே பணிந்து கொள்; அவர் ஒருவருக்கே ஆராதனை செய் என்று எழுதியிருக்கிறதே'' என்றார். அவர் பிசாசானவனை எதிர் கொண்ட பொழுது அவனை வார்த்தையை கொண்டே சந்தித்தார். ஏனெனில் அவரே வார்த்தையாய் இருந்தார். அந்த வார்த்தை மாமிசமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். மோசே உபாகமம் 18:15-ல் இவரைக் குறித்து பேசியிருக்கிறார். 32பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம், இந்த ஐந்து புத்தகங்களையும் மோசே எழுதினார். அங்கே அவர் நடந்ததையும் நடக்கவிருப்பதையும் ஏவப்பட்டு எழுதினார். அவர் என்ன சம்பவிக்கும் என்று கூறினாரோ அது நடந்தது. ஆகவே அவர் என்ன நடந்தது என்று கூறினாரோ அதுவும் உண்மையென்று அறிகிறோம். ஒரு மனிதன் இந்த வழியாக பார்த்து, இது இப்படி நடக்கும் என்று சொன்ன வார்த்தை நடந்தேறினால் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்று அவன் சொன்னது அனைத்தும் ஏவப்பட்டு எழுதினவைகளே. 33யூதர்கள் அவர்களுடைய தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கும் படி கற்பிக்கப்பட்டு இருந்தார்கள். இன்னமும் அதை செய்கிறார்கள், பவுல் சொன்னது போல ''யூதர்கள் அடையாளத்தையும், கிரேக்கர்கள் ஞானத்தையும் தேடுகிறார்கள். நாங்களோ. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பிரசங்கிக்கிறோம்'' “உங்களில் யாராகிலும் ஒருவன் ஆவிக்குரியவனாகவோ அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்தால், தீர்க்கதரிசனத்தின் மூலமாகவும் தரிசனத்தினாலும் சொப்பனத்தினாலும் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன். அவன் சொல்வதெல்லாம் வாய்த்தால் அவன் சத்தத்துக்கு செவி கொடுங்கள்.'' அது நியாயமானது தான். ''ஆனால் அவன் உரைத்தது நடவாமல் போனால், அவனுக்குச் செவி கொடுக்க வேண்டாம்''. அவர் கர்த்தர். அவர் பொய் சொல்ல முடியாது. ஆனால் மனிதன் ஒருவன் ஒரு காரியத்தை சொல்லி அது நடந்தேறிற்று என்றால் அவனை உற்று கவனித்துக் கொண்டே வாருங்கள். அது ஒவ்வொரு முறையும் நிறைவேறிக் கொண்டே வந்தால், அந்த வார்த்தை அவனுடையதல்ல. அது தேவனாய் இருக்க வேண்டும். ஆகவே தேவன் அந்த தீர்க்கதரிசிக்கு சொன்னார்... அல்லது அந்த மனிதனின் சத்தத்திற்கு செவி சாய்க்கும்படி யூதர்களுக்கு சொன்னார். ஏனெனில் அவன் கர்த்தரால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி. 34அவர்களில் மோசே மகா பெரிய தீர்க்கதரிசியாய் இருந்தான் (Major prophet). அவனுடைய வாழ்க்கை சரித்திரத்தை வைத்து, அவன் கிறிஸ்துவுக்கு எப்படிச் சாயலாக திகழ்ந்தான் என்பதை பேச இங்கு நமக்கு அதிக நேரமில்லை. ஆனால் அவன் மகா பெரிய தீர்க்கதரிசி. ''உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார், அவருடைய வார்த்தைக்கு கீழ்படியாதவன் எவனும் தன் ஜனத்திலிராதபடி அறுப்புண்டு போவான்'' என்று அவன் சொன்னான். மோசே இவ்விதம் சொல்லியிருப்பானேயானால் மற்ற தீர்க்கதரிசிகளும்... யாகமத்தை மோசே எழுதினான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏதேன் தோட்டத்திலிருந்தே “ஒரு ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்'' என்றும், மற்றும் மேசியாவின் வருகையைக் குறிக்கும் அநேக வாக்குத்தத்தங்களையும் மோசே எழுதினான். அதன் பின்னர் ஏசாயா, ஏரேமியா போன்ற பெரிய தீர்க்கதரிசிகளும், மேசியாவின் வருகைக்குரிய தீர்க்கதரிசனங்களை உரைத்தனர். தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட வார்த்தை நிறைவேறினது. ”அவர் வரும்பொழுது, ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்“ என்று உரைத்து சொன்னார்கள். ”அவர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்'' என்று மோசே சொன்னான். அவர் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு நாம் இயேசுவை காண விரும்பினால் ஒரே ஒரு வழிதான் உண்டு. வேதம் சொல்லுகிறது. “அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்'' என்று. இல்லையா... 35ஒரு மணி நேரத்திற்கு, சற்றே நம்முடைய கோட்பாடுகளை தூர வைத்துவிடுவோம். ஒரு அரைமணி நேரத்திற்கு நம்முடைய கோட்பாடுகளை தூர வைத்துவிடுவோம். நம்முடைய ஸ்தாபனக் கருத்துக்களைத் தூர வைத்துவிடுவோம். அவர் என்னவாக இருந்தார் என்பதைக் காண, பின்னோக்கி ஆரம்பத்திற்குச் செல்வோம். இது ஒரு நியாயமான காரியம். இல்லையா? ஆரம்பத்திற்குச் சென்று, அவர் என்னவாக இருந்தார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், இப்பொழுது அவர் என்னவாக இருக்கிறார் என்று புரிந்து கொள்வோம். அதற்கு ஒரே ஒரு வழி... அவர் ஆரம்பத்திலேயே ஒரு கோட்பாடாக இருந்தால், கோட்பாடுகள் சரியானவைகளே. அவர் ஆரம்பத்தில் ஒரு ஸ்தாபனமாக இருந்திருந்தால், ஸ்தாபனங்கள் இருப்பது சரியே. அது எந்த ஸ்தாபனமாக இருந்திருக்கும் அல்லது எந்த கோட்பாடு என்பதை அறிய வேண்டும், ஆனால், ஆரம்பத்தில் அவர் வார்த்தையாயிருந்தார்; ஆகையால் அவர் இப்பொழுதும் வார்த்தையாகவே இருக்கிறார். பரி. யோவான் எழுதின சுவிசேஷத்திலிருந்து இப்பொழுது வாசிக்கிறேன். பரி. யோவான் எழுதின சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்திற்குத் திருப்பினால், அவர் யார்? என்னவாக இருந்தார்? என்பதைக் காணலாம். அங்கே, “ஆதியிலே வார்த்தை இருந்தது'' என்று நாம் பார்க்கிறோம். நான் ஏற்கனவே மேற்கோள் காட்டியது போன்று, ”அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி - நமக்குள்ளே வாசம் பண்ணினார். அவர் என்னவாக இருந்தார் என்பதை நாம் இப்பொழுது அறிந்து கொண்டோம்“ வார்த்தை தேவனாயிருக்கிறது என்பதைப் பார்த்தோம். அந்நாட்களிலே தேவன் மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். ''அவர் நேற்றும்... மாறாதவர் என்று வேதம் சொல்லுகிறது. அது புதிய ஏற்பாடு. 36பழைய ஏற்பாட்டின் கிறிஸ்து, புதிய ஏற்பாட்டின் கிறிஸ்துவாகவே இருக்கிறார், அவர் என்றென்றைக்கும் கிறிஸ்துவாகவே மாறாதவராயிருப்பார். “அவர் அப்பொழுது என்னவாக இருந்தார்'' என்று நாம் அறிந்து கொண்டால். ”அவர் எப்படி இருப்பார்'' என்று நாம் அறிந்து கொள்வோம். அது சரியா? “அவர் என்னைப் போல, என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்'' என்று மோசே உரைத்தார். அவர் வந்த போது - கிறிஸ்து - அவர் எப்படி வருவாரென்று உரைக்கப்பட்டதோ அப்படியே வந்தார். அவர் என்னவாயிருந்தாரோ அப்படித்தான் அவர் இருக்கவேண்டும். அங்கேயிருந்தே நாம், ஆரம்பிப்போம், அதன் பின்னர், அவர் நித்திய காலமாக என்னவாயிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதற்கு நாம் இத்தகைய ஒன்றைதான் கையாள முடியும். 37நேற்று இருந்த அவர் மாறாதவர். இங்கே எபிரேய நியாபகக்காரனாகிய பவுல், எபிரேயர்களுக்குச் சொல்லுகிறார். “இயேசு கிறிஸ்து நேற்றும்... மாறாதவர்” என்று. பழைய ஏற்பாட்டின் யேகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு என்று நம்மெல்லாருக்கும் தெரியும், அவர் இன்றைய, பரிசுத்த ஆவியானவர். அதே தேவன் மூன்று வெவ்வேறு அலுவல்களிலே தம்மை வெளிப்படுத்தினார். எனவே, தேவன் ஒருவரே. தேவனாக அவர் இருந்த எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். கிறிஸ்துவாக அவர் இருந்த எல்லாவற்றையும் சபைக்குள் ஊற்றினார், ஆகவே பாருங்கள், அவர் என்னவாயிருக்கிறார் என்பதை சுலபமாகக் கண்டுக் கொள்ளலாம். “நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர்''. 38அவர் என்னவாயிருந்தார் என்பதை அவருடைய தன்மைகளை வைத்துக் காண வேண்டும். நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடியும், வேதம் வாசிக்கும் அனைவரும் ஏற்றுக் கொள்ளுகிறபடியும், வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களைப் பின்பற்றிச் சென்ற அக்கினி ஸ்தம்பம்; இல்லை, அவர்கள் பின்பற்றிச் சென்ற அக்கினி ஸ்தம்பம் மோசேயோடு பேசின - முட்செடியில் பற்றியெறிந்த - உடன்படிக்கையின் தூதனானாவர் அதே அக்கினி ஸ்தம்பமே. இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை ஏற்றுக் கொள்வோமா? (சபையார் அனைவரும் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). நல்லது, யார் அந்த உடன்படிக்கையின் தூதனானவர்? கிறிஸ்துவே. ''இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும், கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்'' பாருங்கள், அவர் பூமியில் இருந்தபொழுது, அந்த அக்கினி ஸ்தம்பமானது மாம்சமாகி, நம் மத்தியிலே வாசமாயிருந்தது. அவர் இந்த பூமியிலே இருந்தபொழுது ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், தேவனிடத்திற்குப் போகிறேன்'' என்றார். பாருங்கள் நேற்றும், இன்றும்...'' நினைவில் கொள்ளுங்கள். அவர் தேவனிடத்திலிருந்து - அக்கினி ஸ்தம்பத்திலிருந்து வந்தார். அவர் மறுபடியும் தேவனிடத்திற்கு (அக்கினி ஸ்தம்பமாக) போகிறார். 39அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்கு பின்னர், தர்சு பட்டணத்து சவுல், பெந்தெகொஸ்தே ஜனங்களை கைது செய்யும்படி தமஸ்கு பட்டணத்தை கிட்டிச் சேரும் பொழுது, வழியில் என்ன சம்பவித்தது தெரியுமா? அக்கினி ஸ்தம்பம் - ஒரு ஒளி அவனைக் கீழே விழத் தள்ளிற்று, ஒருவரும் அதைப் பார்க்கவில்லை. சவுல் மட்டும் அதைக் கண்டான். அந்த ஒளி குறிப்பிட்ட காலம் வரை அவன் கண்களை குருடாக்கினது. அங்கே நின்றுக் கொண்டிருந்த ஒருவராலும் காணமுடியாத அந்த ஒளியானது, அவனுக்கு அவ்வளவு உண்மையாயிருந்தது. அது மிகுந்த பிரகாசமுடையதாய் இருந்த காரணத்தால் அவன் கண்களை அது குருடாக்கிற்று. “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?'' என்று அவர் கேட்டார். “ஆண்டவரே, நீர் யார்” என்றான் சவுல். இங்கே கவனியுங்கள்! ''நான் இயேசு, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்,'' உங்களுக்கு அது தெரியும், நல்லது, இங்கே அவர் முன்பிருந்த அக்கினி ஸ்தம்பமாகவேயிருக்கிறார். நேற்று அவர் அப்படியாயிருந்து, பவுலின் நாட்களாகிய இன்றும் அவர் அப்படியே இருந்திருப்பாரானால், அவர் என்றும் அப்படியே இருப்பார். எனவே அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பம் - தேவன் - உடன்படிக்கையின் தூதன் - இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின போது எப்படியிருந்தாரோ அவ்வாறே மாறாதவராய் இருக்கிறார். கவனியுங்கள், பரி. யோவான் முதல்... அதிகாரத்தில் - அவருடைய ஊழியத்தைக் குறித்து - எழுதப்பட்டதிலிருந்து நாம் தொடங்குவோம்... அவருடைய பிறப்பு, அழைப்பு, யோவான் ஸ்நானகனிடம் அவர் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுதல், வனாந்தரத்திற்குச் சென்று அங்கு பிசாசானவனால் சோதிக்கப்படுதல், வனாந்தரத்தில் நாற்பது நாட்கள் உபவாசித்து திரும்பி வருதல் போன்றவற்றை நாம் சிந்திக்காமல் கடந்து செல்வோம். வனாந்தரத்திலிருந்து திரும்பி வந்த பின் அவர் ஊழியத்தை தொடங்கினார். இங்கிருந்து அவருடைய ஊழியத்தை தொடர்வோம், பின்பற்றுவோம். அவர் வியாதிஸ்தருக்காய் ஜெபம் பண்ணின போது, உடனே வியாதி நீங்கி அவர்கள் சொஸ்தமாயினர். 40சீமோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனிதனைப் பார்க்கிறோம். அவருடைய சகோதரனாகிய அந்திரேயாவின் அழைப்பை ஏற்று அவன் இயேசுவினிடத்தில் வந்தான், அவன் இயேசுவின் - சமூகத்தை அடைந்தபோது... மிக முக்கியமான மனிதன் இங்கே வருகிறான். பாருங்கள், அவன் பேதமையுள்ளவன் என்றும், படிப்பறியாதவன் என்றும் அப்போஸ்தல நடபடிகளின் புத்தகம் 4-ம் அதிகாரத்தின்படி புரிந்துக் கொள்ளுகிறோம். அவன் சொந்தப் பெயரைக் கூட கையெழுத்துப் போடத் தெரியாதவன் என்று நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். அவன் ஒரு அறிவாளியல்ல. அவன் ஒரு குருவானவரல்ல. அவன் ஒரு செம்படவனாக இருந்தான், எப்பொழுதும் தேவன் ஒன்றுமில்லாதவர்கள் என்னப்பட்டவர்களை தெரிந்து கொண்டு, சிறந்த ஒன்றை உருவாக்குகிறார். இது தேவனால் உண்டாயிற்று என்று எல்லோரும் காணத் தக்கதாக, ஒன்றுமில்லாதவை என்று காணப்படுகிறவைகளின் மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார். ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குகின்றார். இப்படிப்பட்ட அறியாமையுள்ள இந்த மனிதனை அவர் தெரிந்து கொண்டார். தான் அவர்தான் என்பதை இவனுக்கு எப்படி விளங்க வைக்கப் போகிறார்? ஏனெனில் அநேக போலிகள் இதற்கு முன்பு உண்டாயிருந்தனர். ஒவ்வொரு காலத்திலும் இப்படிப்பட்ட போலிகளை நாம் பெற்றிருந்தோம். 41கள்ள டாலர் நோட்டைப் பார்க்கும் போதெல்லாம் அது ஒரு உண்மையான டாலர் நோட்டைப் பார்த்து உருவாக்கப்பட்டது என்று அறியுங்கள். உண்மையான டாலர் நோட்டு என்று ஒன்று இல்லாதிருக்குமானால், அந்தக் கள்ள டாலர் நோட்டே உண்மையானதாக இருக்க வேண்டும். எனவே ஆள்மாறாட்டம் செய்கிறவர்களையோ, அல்லது மாய்மாலம் பண்ணுகிறவர்களையோ பார்க்கும்போது எங்கோ ஓரிடத்தில் உண்மையான - கிறிஸ்தவனும் இருக்கிறானென்று நினைவு கூருங்கள். பாருங்கள்? யாராவது ஒருவன் ஒருவகை மார்க்க சம்பந்தமான முறைகளையோ - பொய்யான தேவன் - அல்லது மனோ தத்துவ கோட்பாடுகளையோ, தன் சொந்த அறிவினால் புகுத்தப் பார்க்கும் பொழுது, அதற்குப் பின்னால் எங்கோ ஓரிடத்தில் ஒரு உண்மையான தேவன் உண்டு என்டதை நினைவு கூருங்கள். கவனியுங்கள், ஓ, நான் அதை நேசிக்கிறேன்! கவனியுங்கள். 42சற்றே பின்னோக்கிச் சென்று, சீமோனின் அந்த சிறிய நாடகத்தை எடுத்துக் கொள்வோம். அவன் மிகுந்த வயதுள்ளவனாயிருந்தான். அவனுடைய தந்தையும் கூட வயது சென்றவராயிருந்தார். அவனைக் குறித்து, ஒரு நாள் நான் வாசித்தறிந்த கதையில் சொல்லப்பட்டது போல, அவனுடைய தந்தை ஒரு செம்படவனாக இருந்தார். அவன் வலையை இழுத்தான். அவர்களுக்கு மீன் தேவையாயிருந்தது. அந்த நாளில் அவர்கள் மிகுந்த மீன்களைப் பிடித்தனர். மீன் பிடிக்கச் செல்வதற்கு முன்பு, வழக்கமாக அவர்கள் ஜெபித்தே செல்வார்கள். அவனுக்கு கடன் இருந்தது. அவன் மிகுதியான மீன்களைப் பிடித்தான். அவன் படகுக்கருகாமையில் உட்கார்ந்துக் கொண்டு, தன் கரத்தினால் சீமோனைத் தழுவியப்படி ''சீமோனே!'' என்று அழைத்தான். உங்களுக்குத் தெரியுமா? அவன் பெயர் 'யோனா' என்று. மேலும் “சீமோன், என் மகனே, ஒரு நாளில் நான் மேசியாவைக் காணுவேன் என்று எண்ணினேன். எகிப்திலிருந்து வந்த நாட்கள் முதலாய் நம்முடைய ஜனங்களின் நம்பிக்கையும் அதுதான் - அல்லது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா ஒருவர் உண்டு என்று அறிந்த நாள் முதலாய், மகனே, நாலாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. மிகப் பெரிய மனிதர்கள், தீர்க்கதரிசிகள் அவரை எதிர்பார்த்தவர்களாய் மரித்துவிட்டார்கள். என்னுடைய நாட்களிலேயே வந்துவிடுவார் என்று எண்ணினேன். ஆனால் இப்பொழுதோ வயது சென்றவனானேன். ஒரு வேளை நான் அவரை பார்க்கமாட்டேன், வய்து சென்றவனானேன். என் ஜனத்தாரோடு சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு நான் ஆயத்தமாயிருக்கிறேன். ஆனால் சீமோனே, உன்னையும் அந்திரேயாவையும் சரியானபடி வார்த்தையில் வளர்த்தேன். அவர் ஒரு வேளை உங்கள் நாட்களில் வருவார். நீங்கள் வார்த்தையில் நிலை கொள்ளத் தக்கதாக, உங்களை சரியானபடி வளர்த்திருக்கிறேன். சீமோனே, அந்திரேயாவே, இப்பொழுது கேளுங்கள். உண்மையான மேசியா தோன்றுவதற்கு முன்பு மேசியா என்ற பெயரில் அநேக காரியங்கள் நிகழும், ஏனெனில் அது சத்துருவாயிருக்கும். சீமோனே, அந்திரேயாவே, எப்பொழுதும் வார்த்தையில் நிலைத்திருக்க மறந்து போகாதிருங்கள். வார்த்தையை புறக்கணிக்காதீர்கள். மேசியா வரும்போது அவர் மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் சபையின் திட்டத்தில் மிகப் பெரிய ஒருவராகவும் இருப்பார் என்பதும், வார்த்தையை வியாக்கியானப்படுத்துவதில் வல்லவராகவும், இதைப் போன்றே பெரிய காரியங்களைச் செய்பவராகவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வேதம் சொல்லுகிறது ''அவர் மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்'' என்று. ஆமென். இந்த அடிப்படையில் தான் அவரை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 43அந்திரேயா இயேசுவைக் கண்ட பிறகு சீமோன் அவனிடம் வந்தபோது; “நாங்கள் மேசியாவைக் கண்டோம்'' என்றான். ஒருவேளை சீமோன் இப்படி நினைத்திருக்கக் கூடும், அந்திரேயாவே, நீ ஆழத்திற்கு சென்றுவிட்டாய் என்று நினைக்கிறேன். நானோ உன்னுடன் வருகிறேன். அப்பொழுது அறிந்துக் கொள்ளுவேன். எனவே, அவன் இயேசுவினிடத்தில் வந்த போது “நீ யோனாவின் குமாரனாகிய சீமோன்'' என்று இயேசு கூறினார். அதுபோதும், அவ்வளவுதான். அவன் அவரை விசுவாசித்து ஏற்றுக் கொண்டான். இந்தப்படியாகத்தான் அதற்குப் பின்னர் அவன் பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைப் பெற்றான். பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவன் எந்தப் பள்ளிக்கும் சென்றதில்லை. அவர் வேதத்தில் சொல்லப்பட்ட மேசியாவாக இருந்த காரணத்தால், தேவனுடைய வெளிப்படுத்தல் மூலமாக, அவர் தான் மேசியா என்பதை அறிந்தான். மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திலிருந்து, நானூறு வருட காலமாக, அவர்கள் தீர்க்கதரிசியைப் பெற்றிருக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசி. அநேக கள்ளதீர்க்கதரிசிகள் அவர்களுக்கு இருந்தனர். ஆனால் இவரோ, உண்மையான தீர்க்கதரிசியாயிருந்து, சத்தியத்தைச் சொன்னார்! அவனைப் பார்த்த உடனேயே அவன் யார் என்பதை உணர்ந்தவராய், அவனுக்கு வார்த்தையைக் கற்பித்த வயது சென்ற தேவனுடைய மனிதனாகிய அவனுடைய தந்தை யார் என்பதையும் அறிந்தவராய், அவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. ''நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' பாருங்கள்? “உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்'' அவரை வெளிப்படுத்த அது போதுமானதாக இருந்தது. நேற்று அவர் தம்மை மேசியா என்று நிரூபிக்க இயேசு அதை தான் செய்தார். 44அங்கே ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான். விரைவாக முடித்துவிடுவோம். பிலிப்பு என்னும் பெயர் கொண்ட ஒருவன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஏன்? அது அவனை ஊக்குவிப்பதாக இருந்தது! அவனைக் குறித்து தான் நாம் இங்கே வாசித்துக் கொண்டிருக்கிறோம். அது அவனை மிகவும் ஊக்குவிப்பதாக இருந்தது. பிலிப்பு, “அத்துடன் அது முற்று பெற்றுவிட்டது. அவர் தான் மேசியா என்று நிச்சயம் எனக்குத் தெரியும்'' என்று கூறியிருப்பான். அவன் மலையைச் சுற்றிலுமாக பதினைந்து மைல் தூரம் பிரயாணம் செய்தான். பள்ளிப் பருவத்தின்போது அவன் ஒரு நண்பனைப் பெற்றிருந்தான். அந்த நண்பன் மிகவும் நல்லவன்; வார்த்தையின்படி நடக்கிறவன்; மேன்மை பொருந்தியவன்; வேதத்தை நன்றாக அறிந்தவனும், தேவன் மீது அன்பு பாராட்டுகிறவனுமாயிருந்தான். “நாத்தான்வேல் எங்கே?'' என்று அவன் கதவைத் தட்டுவதை நான் காணமுடிகிறது. (சகோ. பிரான்ஹாம் மேடையில் தட்டுகிறார் - ஆசி.) “அவர் வெளியில் சென்றுள்ளார். அதோ, அவர் அங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறார்” என்று அவர் மனைவி சொன்னாள். பிலிப்பு அவனைக் காணச் சென்றான். அவன் ஒரு மரத்தின் கீழ் இருந்தான். அங்கு அவனைப் பார்த்த உடனேயே, ''வந்து பார், நாங்கள் யாரைக் கண்டோமென்று - யோசேப்பின் குமாரனாகிய நசரேயனாகிய இயேசுவை'' என்று சொன்னான். 45இப்பொழுது நான் இப்படிக் கற்பனை செய்து பார்க்கிறேன் பிலிப்போ அல்லது... அதற்கு நாத்தான்வேல், “பிலிப்புவே, நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக் கூடுமோ?'' அதற்கு அவன், “வந்து பார்”, என்றான். எல்லாருக்கும் ஏற்ற ஒரு பதில் இது. வீட்டில் உட்கார்ந்துகொண்டு குறைகூறிக் கொண்டிருக்காதீர்கள். இங்கிருந்து எழுந்து சென்று விடவும் வேண்டாம். அமர்ந்திருந்து, இது சத்தியமா? அல்லவா? என்று கண்டுக் கொள்ளுங்கள். பாருங்கள்? ''நீயே வந்து பார்'' அவர்கள் வளைவைச் சுற்றி சென்றார்கள். அவர்களின் உரையாடலைக் கவனிப்போம். நாத்தான்வேலே, “மேசியா எப்படிப்பட்டவராயிருப்பார் என்று வேதம் உரைக்கிறது?'' என்று பிலிப்பு நாத்தான் வேலிடத்தில் கேட்பதை என்னால் கேட்க முடிகிறது. “ஓ, அவர்... அவர் மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்” ''நிச்சயமாக, அது உண்மை. நல்லது, நான் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நசரேயனாகிய இயேசு, அந்த வயது சென்ற செம்படவன், தன் பெயரைக் கூட கையெழுத்திடத் தெரியாத அந்த மனிதன் அவனிடத்தில் நீயும் மீன் வாங்கியிருக்கிறாயே? அவனை ஞாபகமிருக்கிறதா?'' “ஆம், ஓ, உண்மையாக, யோனாவின் குமாரன். அவனை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் பெயர் சீமோன் என்பது''. அந்த மனிதனுடைய பிரசன்னத்தில் சீமோன் நடந்தபோது, “அவன் யாரென்பதையும் அவன் தந்தையைக் குறித்தும் சொன்னார். நீ யார் என்பதை அவர் சொன்னால் நான் அதிசயப்பட மாட்டேன்'' என்றான், “நல்லது, சற்று பொறு. அது என்னவென்று நான் பார்க்க வேண்டும்'' என்றான். 46கடைசியாக, கூட்டம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை அவர்கள் அடைந்தனர். இயேசுவின் பிரசன்னத்தை அடைந்த உடனேயே, இயேசு, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். “அவன் ஆடை உடுத்தியிருந்த விதத்திலிருந்து, அவன் இஸ்ரவேலன் என்று அறிந்திருப்பார்'' என்று நீங்கள் சொல்லலாம். இவர்களைப் போலவே, எல்லாக் கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்களும் ஆடை அணிவார்கள். தாடி வளர்த்து, கறுப்பாக இருப்பார்கள். தலைப்பாகை கட்டுவார்கள்; இவர்களைப் போலவே மேலாடை அணிவார்கள். அவன் உத்தமன் என்றும், கபடற்றவன் என்றும், நீதிமான் என்றும் அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொன்னார். அவனைப் பார்த்துச் சொன்னார், “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்று. வேதமறிந்த மனிதனாகிய அவனை, அந்த வார்த்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரபி என்றால் போதகரே என்று பொருள். அவன் 'ரபி' என்று அழைத்தான். அதற்கு 'போதகரே' என்று பொருள். ''இதற்கு முன்பு என்னை எப்பொழுது கண்டிருக்கிறீர்கள்? இதுதான் நம்முடைய முதல் சந்திப்பு. இதற்கு முன்பு, எப்பொழுது என்னை அறிந்திருக்கிறீர்? ''பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும் போது, உன்னைக் கண்டேன்'' என்றார், அவ்வளவு தான். அது தான் இது. ''நான் உன்னைக் கண்டேன். முந்தின நாளில் மலையிலிருந்து ஏறக்குறைய பதினைந்து மைல் தூரத்தில் மரத்தின் கீழிருந்த உன்னை நான் கண்டேன்“ அப்பொழுது அவன் என்ன செய்தான் தெரியுமா? அவருக்கு அருகில் ஓடினான். ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்றான்! அதுவே அந்த நேரம். ஏன்? அவர் வேதப் பிரகாரமாயிருந்தார் வரவேண்டுமென்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டவர் அவரே. ''நீர் தேவனுடைய குமாரன்! நீர் இஸ்ரவேலின் ராஜா!'' மற்றவர்கள் என்ன கூறினபோதிலும் அவனுடைய கருத்தை அது மாற்றவில்லை. 47ஓ, அங்கே இப்பொழுது சுற்றி நின்றுக் கொண்டிருப்பவர்களாகிய பரிசேயர், சதுசேயர், பேராயர்கள், அதிலும் பெரியவர்கள், தலைமையானவர்கள், சபையின் பிரதானமானவர்கள், பிரதான ஆசாரியன், ஆசாரியர்கள். அனைவரும் அந்தக் காட்சியைப் பார்த்தார்கள். அவர்களுடைய சபையோருக்கு பதில் அளிக்க வேண்டும். அது அவர்கள் என்ன என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டுமே! எனவே அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “இந்த மனிதன் பெயல்செபூல், பிசாசுகளின் தலைவன்'' என்றனர். பாருங்கள்? வேறு வகையாய்ச் சொன்னால், ”அவன் குறி சொல்பவன், பிசாசு“ என்றனர். இயேசு, அவர்கள் பக்கமாய் திரும்பி, “நான் உங்களை மன்னிக்கிறேன்'' என்றார். பாருங்கள், அவர்கள் அதை செய்த தேவனுடைய ஆவியை அசுத்தாவி என்றனர். ”இதைச் செய்கிறதற்காக நான் உங்களை மன்னிக்கிறேன். ஆனால் ஒருநாள் பரிசுத்த ஆவியானவர் வருவார், இதே காரியத்தை நிகழப் பண்ணுவார். அவருக்கு விரோதமாக ஒரு வார்த்தை சொன்னாலும், இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்பட மாட்டாது'' என்றார் அவர். அதற்கு விரோதமாக ஒரு வார்த்தை சொன்னாலும். அது இன்னொரு காலத்திற்குரியது. அவர்களை நோக்கிப் பாருங்கள். 48எபிரேயர் 4-ம் அதிகாரத்தில் வேதம் சொல்கிறது, “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயிருக்கிறது'' கிறிஸ்துவாகிய வார்த்தை” கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகனையும் வகையறுக்கிறதாயுமிருக்கிறது'' என்று. அந்த வார்த்தை! வார்த்தை முன்னோக்கி செல்லும் போது நிகழும் காரியம் அதுதான். அதுவே வார்த்தையை உறுதிப்படுத்தி, நிலைப்படுத்துகிறதாயிருக்கிறது. அவர்கள் மத்தியில் மாம்சத்தில் வெளிப்பட்ட வார்த்தையானவர் அங்கே நின்று கொண்டிருந்தார். வார்த்தை என்ன செய்யும் என்று சொல்லப்பட்டதோ, அதையேதான் செய்தும் கொண்டிருந்தார். ஆனால் அதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. 49பூமியிலே, காம், சேம், யாப்பேத் இந்த மூன்று வம்சமே இருக்கிறது என்பதை நினைவில் வைப்போம். வேதத்தை விசுவாசிப்போம் என்றால், இதை அறிந்துக் கொள்வோம், யூதர், புறஜாதி, சமாரியர் இந்த மூன்று பிரிவினரும், நோவாவின் புதல்வர்கள் மூலம் உண்டானவர்களே. பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களுடனிருக்கும் பேதுருவைக் கவனித்தீர்களா? அதில் ஒன்றை வைத்து, பெந்தெகொஸ்தே தினத்தன்று, யூதர்களுக்கு திறந்தார். அது சரியா? பிலிப்பு என்பவன் சமாரியா நாட்டுக்குச் சென்று தேவ வசனத்தைப் பிரசங்கித்தபோது, அவர்களில் ஒருவரும் பரிசுத்தாவியைப் பெறாமல், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருந்தார்கள், இந்தச் செய்தி அப்போஸ்தலருக்கு அறிவிக்கப்பட்டபோது, பேதுரு வந்து, அவர்கள் பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு அவர்கள் மீது கைகளை வைத்தபோது, பரிசுத்தாவியைப் பெற்றார்கள். அது சரியா? அப்போஸ்தலர் நடபடிகள், 10:44 “இந்த வார்த்தைகளை பேதுரு பேசிக் கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்தாவியானவர் இறங்கினார்'' பாருங்கள்? கவனியுங்கள், யூதர்கள், புறஜாதியார், சமாரியர்கள் என்று மூன்று வகையான ஜனங்கள் இருந்தனர். 50இங்கே யூதர்களும், சமாரியர்களும், மேசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போனார். அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போக வேண்டியிருந்தது. பரி. யோவான் 5:19ல், இயேசு பெதஸ்தா குளத்தை விட்டு அப்புறம் சென்றபோது, அவர் சொன்னதை நினைவு கூருங்கள். “மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறான்றையும் தாமாகச் செய்யமாட்டார்''. அது அவர், ''ஆனால் நான்'' பிதா சொல்வதைக் கேட்பதல்ல, பிதாவானவர் செய்வதை காண்கிறது'' வேதம் பொய்யுரையாது. எனவே, மற்றவைகள் எல்லாமே தவறாகத்தான் இருக்க வேண்டும். அவர் சொன்னார், ''ஒன்றைச் செய்தவற்கு முன்பு பிதா நான் என்ன செய்ய வேண்டுமென்பதை தரிசனத்தில் விளங்கப் பண்ணுகிறார்; அதன் பின்னரே அதைச் செய்கிறேன்'', பாருங்கள்? அது அவரைச் சுற்றிலும் இருந்தது ''ஆனால் உன்னைக் குறித்தோவெனில், பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்''. அது உண்மை. ஆகவே அவர் சமாரியா நாட்டு வழியாய்ப் போக வேண்டியிருந்தது. அவர் சமாரியாவின் சுற்றுப்புறத்தில் சென்றார். அது 12.00 மணி வேளையாயிருந்தது. அவர் சீகார் என்றும் ஊருக்கு வந்த போது, அவருடைய சீஷர்களை போஜன பதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்கு அனுப்பியிருந்தார். அப்பொழுது, சீகார் என்றும் ஊரிலுள்ள ஒரு ஸ்திரீ (தண்ணீர் மொண்டுக்கொள்ள) ஊருக்கு வெளியே வந்தாள், 51அவள், “கெட்ட நடத்தையுள்ளவள்'' என்று நாம் அழைக்கிறோமே, அப்படிப்பட்ட ஒரு பெண். ஒருவேளை, வாலிப வயதுடைய மிகுந்த சவுந்தரியமுள்ள பெண்ணாயிருந்து, தவறான பாதையைத் தெரிந்துக் கொண்டு, கேட்டில் நடந்து கொண்டிருந்தவளாக இருந்திருப்பாள். அவள் தண்ணிர் மொண்டுக் கொள்ளும்படி வந்தாள். ஏனென்றால் மற்ற நேரங்களில் அவள் வர முடியாது... அந்த தேசத்தில் நான் இருந்திருக்கிறேன். இப்பொழுதும் அவர்கள் கடைப்பிடித்து வரும் ஒழுங்கு அதுவே, அப்படிப்பட்ட கெட்ட பெண்கள், உசிதமான பெண்களோடு ஐக்கியம் கொள்வதில்லை. எனவே அப்படிப்பட்ட உசிதமானவர்கள் தண்ணீர் மொண்டு கொள்ள வரும் போது, இவள் கிணற்றண்டையில் வர இயலாது. ஆகவே மற்றவர்கள் தண்ணீர் மொண்டு சென்ற பிறகு இவள் வருகிறாள். அவள் தண்ணீர் மொள்ள வந்த போது, கயிற்றை இராட்டினத்தில் மாட்டினாள், அதில் இரண்டு கொக்கிகள் உள்ளன, அவைகளை குடங்களின் வளையங்களில் மாட்டினாள், அது வாளியல்ல. களிமண்ணினால் உருவாக்கப்பட்ட ஒருவகையான குடம். அதை கிணற்றுக்குள் விட்டு மறுபடியும் மேலே தூக்குவார்கள். ஆகவே, அந்த வாளியைக் கிணற்றுக்குள்விட்டாள். அப்பொழுது, ''ஸ்திரீயே, குடிக்கத் தண்ணீர் தா'' என்று யாரோ ஒருவருடைய குரலைக் கேட்டாள். அவள் திரும்பிப் பார்த்தாள். அது ஒருவகையான பரந்த காட்சியைப் போல இருக்கிறது. சீகாரின் பொதுக் கிணறு, அந்தப் பட்டணத்திற்கு வெளியேயிருக்கிறது. அவள் திரும்பிப் பார்த்த போது, நடுத்தர வயதுள்ள யூத வாலிபன் ஒருவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் முப்பத்திரண்டு வயதைக் கடந்தவராயிருந்தார். 52பரி. யோவான் 6ம் அதிகாரத்தில் அவருக்கு ஐம்பது வயது என்று அவர்கள் கேட்டார்கள். அவருடைய செய்கையினால் அவரை அப்படி மதிப்பிட்டனர். ''உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லை, ஆபிரகாமைக் கண்டேன் என்கிறாயே? இப்பொழுது நீ பைத்தியம் பிடித்தவனென்று அறிகிறோம்'' என்றனர். ''ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னே நான் இருக்கிறேன்'' என்றார். அது சரி. அவர்கள் அறிவுள்ளவர்களாகவும், சபை வைராக்கியம் கொண்டவர்களுமாய் இருந்தபடியால், அதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அறிவுப் பெருக்கத்தினால் தேவனை அறிய முடியாது. தேவனை அறியவேண்டுமானால் அவையெல்லாவற்றையும் நீங்கள் மறந்து போக வேண்டும். இல்லையா? 53அவர்கள் அந்த சூழ்நிலையில் தான் இருந்தனர். (அவர்களின் நிலை அதுதான்) இந்நாட்களில் நாம் வேசி என்று அழைக்கிறோமே... இந்தப் பெண்ணின் நிலை அது தான். அவள், “ஐயா, யூதர்களாயிருக்கிற உங்களுக்கு சமாரிய ஸ்திரீயாகிய என்னிடத்தில் தாகத்துக்குத் தா என்று கேட்பது வழக்கமில்லையே! ஏனென்றால் நாங்கள் உங்களோடு சம்பந்தங் கலவாதவராயிற்றே'', வேறு வகையாய் சொன்னால், ''அங்கே ஒரு ஒதுக்கப்படுதல் உண்டாயிருந்தது'' இயேசு பிரதியுத்தரமாக, “ஸ்திரீயே, உன்னிடத்தில் பேசுகிறவர் இன்னாரென்பதை நீ அறிந்திருந்தாயானால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நீ மொண்டுக் கொள்ள வராதபடிக்கு நானே உனக்குத் தண்ணீர் கொடுத்திருப்பேன்'' என்றார். அங்கே அவர் என்ன செய்கிறார்? அவளுடைய ஆவியுடன் தொடர்பு கொள்கிறார். இப்பொழுது நினைவு கூருங்கள். அவர் சமாரியா வழியாய் போக வேண்டியதாயிருந்தது. “சமாரியா வழியாய் போ'' என்று பிதாவானவர் சொல்லியிருந்தார். பிதா வெளிப்படுத்திக் காட்டினாலேயன்றி, அவர் தாமாக ஒன்றும் செய்யவில்லை. 54இப்பொழுது அவர் சமாரியாவிலிருக்கிறார். என்ன சம்பவிக்கப் போகிறது என்று அவர் அறியாவிட்டாலும் அங்கே ஒரு ஸ்திரீ இருந்தாள். ஆகவே அவளோடு உரையாட எண்ணங் கொண்டார். அவர் தண்ணீரைக் குறித்து பேசினார். அவளோ தேவனை தொழுதுக் கொள்ள ஏற்ற ஸ்தலம் இந்த மலையா? அல்லது அந்த மலையா? அல்லது வேறு எங்கு என்று பேசினாள். இந்த உரையாடலில் அவளுடைய பிரச்சனை என்னவென்பதைக் கண்டுக் கொண்டார். அது என்ன பிரச்சனை என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆம், அவள் ஐந்து, உண்மையில் ஆறு புருஷர்களைக் கொண்டிருந்தாள். ஆகவே அவள் சொன்னாள்... அவர், “நீ போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா'' என்றார். அதற்கு அவள், ''எனக்கு புருஷன் இல்லை'' என்றாள். அவர் அவளைப் பார்த்து, “எனக்கு புருஷன் இல்லை என்று சொன்னது சரிதான். எப்படியெனில் ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கு இருக்கிறவன் புருஷனல்ல. இதை உள்ளபடி சொன்னாய்'' என்றார். 55கவனியுங்கள்! இதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன். நான் முடிக்க வேண்டும். நாகரிகம் பெற்ற ஊழியக்காரர்களையும், இந்த ஸ்திரீ எப்படிப்பட்ட நிலையிலுள்ளவள்! இந்த இருவருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்! “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன்'' என்றாள். ஆசாரியர்களும் கல்விமான்களும், “நீ பெயல்செபூல் - பிசாசுகளின் தலைவன், பிசாசு பிடித்தவன், குறி சொல்பவன்'' என்றனர். இந்த ஸ்திரீயோ, ''ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வரும்போது, அவர் எல்லாவற்றையும் அறிவிப்பார் என்று அறிந்திருக்கிறோம்'' என்றாள். நேற்றைய மேசியாவிற்குரிய அடையாளம் அதுவாக இருக்குமானால், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர், அது இன்றும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்! அவள், கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் வரும்போது, எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார். ஆனால், “நீங்கள் யார்?'' என்று கேட்டாள். அதற்கு அவர், ''உன்னுடனே பேசுகிற நானே அவர்'' என்றார். அது போதுமானதாக இருந்தது. அவள் கண்டுக் கொண்டாள்? 56வித்தியாசத்தைப் பாருங்கள். ஸ்தாபனத்தார் கோட்பாடுகள் மீது சார்ந்துள்ளோர், ஸ்தாபனத்தின் வித்துக்களின் மீது வெளிச்சம் பட்டபோது, அது கிரியை நடப்பிக்கவில்லை. ஆனால் முதன் முதலாக அந்த சிறிய முன்குறிக்கப்பட்ட வித்தின் மீது வெளிச்சமானது பிரகாசித்தபோது, பிரகாசித்த உடனே அவள் அதை அடையாளம் கண்டுக் கொண்டாள். அவள், “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். மேசியா வருகிறார் என்றும், அவர் வரும்பொழுது இப்படிப்பட்ட காரியங்களை செய்வார் என்றும் அறிந்திருக்கிறோம்'' என்றாள். அதற்கு அவர், ''நானே அவர்'' என்றார். அவள் ஊருக்குள்ளே போய், ஜனங்களை “நோக்கி, நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியாவா?'' என்றாள். ஆமென். பார்த்தீர்களா? நேற்று அவர் என்னவாயிருந்தாரோ இன்றும் அவர் அதுவாகவே இருக்கிறார். என்றென்றும் அவ்வாறு இருப்பார். பாருங்கள்? அவர் அவ்வாறு இருந்தார். 57தாவீது தேவனுடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தான். தீர்க்கதரிகள் தேவனுடைய ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தனர். கிறிஸ்து யோசேப்புக்குள் இருந்தார். அதுவே அவனை முழுமையாக கிறிஸ்துவை பிரிதிபலிக்கச் செய்தது. முப்பது வெள்ளிக் காசுக்கு அவன் விற்கப்பட்டான். தகப்பனால் நேசிக்கப்பட்டான். தன் சொந்த சகோதரரால் வெறுக்கப்பட்டான். சிறைப்பட்டும் இருந்தான். கிறிஸ்து சிலுவையில் தொங்கும் போது ஒருவன் இரட்சிக்கப்பட்டான். அது போலவே பானபாத்திரக்காரன் தலைவனும், சுயம்பாகிகளின் தலைவனும், அதில் ஒருவன் இரட்சிப்பைப் பெற்றான், ஒருவன் அதை இழந்து போனான். இயேசுவில் நடந்த அதே காரியம்! பார்வோனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் புறப்பட்டு செல்லும் போதெல்லாம், “யோசேப்பு வருகிறார். தெண்டனிட்டுப் பணியுங்கள்'' என்று அவனுக்கு முன்னாக எக்காளம் முழங்கிற்று. யோசேப்பின் மூலமாகவேயன்றி, ஒருவனும் பார்வோனிடத்தில் வரமுடியாது. அதுவே, கிறிஸ்து யோசேப்பில் இருந்தார் என்பது! 58கிறிஸ்து தாவீதுக்குள் இருந்தார். தள்ளப்பட்ட ராஜாவாக, ஒலிவ மலையின் உச்சிக்குச் சென்றான். அவன் சொந்த ஜனங்களால் ராஜரீகத்தை இழந்த போது, தள்ளப்பட்ட ராஜாவாக மலையின் உச்சிக்கு சென்று எருசலேமுக்காக அழுதான். அவன் தள்ளப்பட்ட ராஜாவானதால் மிகுந்த சத்தமிட்டு அழுதான். கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவி எருசலேம் மீது அழுதது. “எருசலேமே, எருசலேமே, கோழி தன் சிறகுகளின் கீழே கூட்டி சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ (உன் பிள்ளைகளை கூட்டி சேர்த்துக் கொள்ள) மனதாயிருந்தேன்'' கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்குள் இருந்து வந்து, கடைசியில் பரிபூரண அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர் தோன்றினார். பாவ நிவாரணபலி உண்டாக்கப்படவில்லை. எனவே அவர் மாமிசமான யாவர் மேலும் வர முடியாமற் போயிற்று, ஏனென்றால் அது... கீழே அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாயிருந்தனர். ஆவியானவர் வந்திருக்கிறார், அது ஆவியின் ரூபத்தில் இருக்கும் கிறிஸ்துவே. இப்பொழுது கவனியுங்கள். 59புறஜாதிகள் மத்தியில் அப்படிப்பட்ட அடையாளத்தை அவர் ஏன் நடப்பிக்கவில்லை?ஒருபோதும் நடப்பிக்கவில்லை. ஏன்? புறஜாதியார் மேசியாவை எதிர்பார்த்தவர்களாய் இருக்கவில்லை. அவர்கள் அஞ்ஞானிகள் நாமெல்லாரும் ரோமர்களும் மற்ற அஞ்ஞானிகளும் முதுகில் ஒரு தண்டாயுதத்தை (club) வைத்துக் கொண்டு விக்கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மேசியாவின் வருகையை எதிர்பார்த்தவர்களாக இல்லை. அவருடைய வருகைக்குக் காத்திருக்கிற ஜனங்களுக்கு மாத்திரமே மேசியா வருகிறார்; அது ஒரே வழிதான் உண்டு. “அவருடைய வருகைக்குக் காத்திருக்கிறவர்களுக்கே அவர் இரண்டாம் முறையாக வெளிப்படுவார்'' அவருடைய வருகையை எதிர்பார்க்கிறவர்களுக்கே. அப்படி எதிர்பார்க்கிறவர்களைப் போல் நடிப்பவர்களுக்கு அல்ல. ஆனால் உண்மையாய் அவருடைய வருகையை எதிர்பார்ப்பவர்களுக்கு. கவனியுங்கள், ஒருபோதும் அவர் புறஜாதிகளிடத்தில் வரவில்லை. புறஜாதியாருக்கு முன்பாக அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் நடப்பித்துக் காட்டவில்லை. மாறாத தேவன்! இரண்டாயிர வருட காலமாக, எல்லா வகையிலும் பாண்டியத்தை பெற்றுள்ளோம். இப்பொழுது சாயங்காலம் வந்திருக்கிறது. ஆகவே புறஜதியார் மேசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இன்னும் அவர் மாறாதவராயிருந்தால், முன்பு அந்த இரண்டு கோத்திரங்களுக்கு எப்படி வெளிப்பட்டாரோ, அப்படி இப்பொழுதும் வெளிப்பட வேண்டும். அப்படி வாக்குபண்ணியிருக்கிறார்! ஒரே ஒரு வேத பகுதியை எடுத்து கூறி முடித்துவிடுகிறேன். மூன்று வகையான இந்த ஜனங்களை உங்கள் மனதில் எப்பொழுமே நிறுத்தி வையுங்கள். அவர்கள் விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள் என்னப்பட்டவர்களே, எல்லாக் கூட்டங்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பாருங்கள்? 60ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்குக் கொடுக்கப்பட்டது. இப்பொழுது பாருங்கள், ஆபிரகாமின் சந்ததி, லோத்தின் வடிவத்தில். உலகத்தின் உல்லாசங்கள் நிறைந்த சோதோமுக்குள் பிரவேசித்தது அதுதான். இயற்கையான சபை, ஸ்தாபன சபை, ஆனால் ஆபிரகாம் ஆவிக்குரிய சபைக்கு அடையாளமாக இருந்தான். தேவன் அவனைச் சந்தித்தார். அவன் வெளியே வரும்படி அழைக்கப்பட்டவனாயிருந்தான். அவன் ஒரு போதும் சோதோமுக்குள் சென்றதில்லை, சோதோமுக்கு வெளியில் இருந்தான். அதுவே வெளியே அழைக்கப்பட்ட சபை. முடிவு காலம் வந்தபோது அந்த தேசத்தை அக்கினியால் சுட்டெரிக்கப் புறப்படுகிறார். அதைதான் மறுபடியும் செய்ய நிர்ணயித்தார். அது சரியா? இப்பொழுது கவனியுங்கள். தேவன் கூறியது, “சோதோம் நாட்களில் நடந்தது போலவே, மனஷகுமாரன் வரும் நாட்களில் நடைபெறும்”. ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள் எல்லோரும் புறஜாதிகளின் நாடுகள், பாருங்கள். அதன் முடிவு சோதோமை போல் இருக்கும். இப்பொழுது புறஜாதிகளின் வருகையாக இருக்கிறது. யூதர்களின் காலம் தண்ணீரினால் அழிய போகிறது. இந்த காலம், புறஜாதிகள் அக்கினியால் அழியப் போகிறார்கள். கவனியுங்கள், “சோதோமில் நடந்தது போல,” மேலும் நாம் கவனிப்போம். 61தேர்ந்தெடுக்கப்பட்ட சபையாக, ஆபிரகாம் சோதோமிலிருந்து வெளியே அழைக்கப்பட்டார். ஆவிக்குரிய விதத்தில், வாக்குத்தத்தத்தின்படி தேவன் எல்லா காலங்களிலும் அவர்கள் பாளையத்தில் தோன்றி அற்புதங்களும் அடையாளங்களும் நிகழ்த்தினார். இங்கே மலைகளின் மேலும் தரிசு நிலங்களிலும் அமர்ந்து அவர்களை போல செல்வந்தர்களாக இல்லாமல், ஏழ்மையாக, சிறு கூட்டமாக, அமர்ந்து; அவர்கள் வெறுக்கிற கேலிக்குரிய கூட்டமாக உள்ளோம். எப்பொழுதும் காயின் பிள்ளைகள் போல் மீதியானவர்கள் செல்வந்தர்களாக, நகரங்களை ஆள்கிறவர்களாக, பெரிய மனிதர்களாக, விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக, இன்னும் அதிகமாக உள்ளனர். அது அவர்களாக எப்பொழுதும் உள்ளனர். தேவன் ஒரு போதும் மாறிவில்லை. அங்கு அவர்கள் அவ்வாறு அமர்ந்துள்ளனர். இப்பொழுது, லோத்தும் அவன் கூட்டத்தாரும் வெதுவெதுப்பான சபையாக சோதோமில் இருந்தனர். ஆபிரகாமும் அவன் கூட்டத்தாரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையாக இருந்தனர். கவனியுங்கள், அப்பொழுது சோதோமியர்கள் அவிசுவாசியாக இருந்தனர். 62அப்பொழுது வானத்திலிருந்து மூன்று துதர்கள் மனித உடையில் இறங்கி வந்தனர். ஒருநாள் காலையில் ஆபிரகாம் தன் கூடாரத்தில் வாசலில் உட்கார்ந்திருந்த போது மூன்று மனிதர்கள் வருவதை கண்டான். அவர்கள் உடையானது பிரயாணப்பட்டு வந்தததால் தூசியாக இருந்தது. அப்பொழுது ஆபிரகாமுக்குள் சிறிதாக ஏதோ ஒன்று தோன்றி, அவர்கள் வினோதமான மனிதர்கள் என்று அறிந்தான். அவர்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததை அவன் கட்டாயமாக அறிந்தவனாய் வெளியே ஓடினான். நீங்கள் மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவனை சந்திக்கும் போது, அவனில் ஏதோ ஒன்று உள்ளது என்று கண்டுக் கொள்வீர்கள். இன்று சாப்பாடு விடுதியிலிருந்து வந்துக் கொண்டிருந்தேன் “தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக'' என்று ஒருவர் சொன்னார். நான் திரும்பிப் பார்த்தேன். ”ஓ, ஏதோ தவறு நடந்திருக்கிறது'' என்றேன். ஒரு சிறிய பெண் என் கரங்களைக் குலுக்கினாள். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனில் ஏதோ ஒன்று! இந்தத் தூதர்கள் ஆபிரகாமிடத்தில் சென்று உரையாட ஆரம்பித்தனர். இப்பொழுது நினைவு கூருங்கள். அவர்களில் இரண்டு பேர் பத்து நீதிமான்கள் அங்கேயிருந்தால், அவர்களை வெளியே அழைக்கும்படி சோதோமுக்குச் சென்றனர். இது சரியா? அவர்களில் இரண்டு பேர், புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவர் ஆபிரகாமோடு தங்கி, அவனோடு உரையாடினார். இது சரியா? இப்பொழுது கவனியுங்கள். 63அவர்கள் சோதோமுக்கு வந்த போது, அற்புதத்தை நடப்பிக்கவில்லை. அவர்கள் உள்ளே பிரவேசிக்க நெருங்கிய போது அவர்களைக் குருடாக்கினார்கள். ஆகவே சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் பொழுது, அவிசுவாசியை அது குருடாக்குகிறதாய் இருக்கிறது. அப்படித்தான் வேதம் சொல்லுகிறது. அங்கே ஒரு நவீன பில்லிகிரஹாம், அறிவு ஜீவியாக நின்று, “வெளியில் வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!'' என்று பிரசங்கிக்கிறார். பாருங்கள்? ஆனால், அந்த ஒருவரோ, ஆபிரகாமோடு தங்கி தெரிந்துக் கொள்ளப்பட்ட சபையில் ஒன்றை நிகழப் பண்ணுகிறார். கூடாரமானது, தனது முதுகுப் புறமாயிருக்கும்படி அவர் உட்கார்ந்திருந்தார். ஓரிரு நாட்களுக்கு முன்பதாக, அவன். ''ஆபிராம்'' என்றும் அவள், “சாராய்'' என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் இப்பொழுது அவள், ''சாராள்'' என்றும், அவன் ”ஆபிரகாம்'' என்றும் அழைக்கப்படுவதை நினைவில் கொள்ளுங்கள். ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்குத் தகப்பன். அவள் “ராஜகுமாரத்தி'' என்று பொருள். பாருங்கள்? தனது முதுகுப்புறமாக அந்தக் கூடாரம் இருக்கும்படி உட்கார்ந்திருந்த அந்நியனும், வழிப்போக்கனுமாயிருந்த அவருக்கு எப்படித் தெரியும்? ''ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?'' என்று கேட்க, அவன் திருமணமானவன் என்பது அவருக்கு எப்படித் தெரியும்?அவளுடைய பெயர் சாராள் என்பதை எப்படி அறிந்திருந்தார்? “உமக்குப் பின்னாலே கூடாரத்தில் இருக்கிறாள்'' என்று ஆபிரகாம் சொன்னான். இப்பொழுது கவனியுங்கள், 'நான்' என்பது தனித்து பிரதி பெயர் சொல்லாகும். “நான் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்,'' அவர் என்ன செய்தார்? அவர் அங்கே உட்கார்ந்து, ஆபிரகாமால் அடிக்கப்பட்ட கன்றுக் குட்டியையும், சாராள் செய்த அப்பத்தையும் புசித்து, பசுவின் பாலைக் குடித்தார். 64சமீபத்தில் யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார், “சகோதரன், பிரன்ஹாமே, அது யார்?'' என்று கேட்டார். ''அது தேவன்'' என்றேன். ''ஆபிரகாம் யாரோடு பேசினான் என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். எந்த ஊழியக்காரனை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவன் அவரை ''ஏலோஹிம்'' என்றழைத்தான் - தன்னில்தானே இயங்கின ஒருவர்; பெரிய எழுத்துக்களில் க-ர்-த்-த-ர், ''கர்த்தர்'' - தன்னில்தானே இயங்கினவர். இதை நழுவ விட்டுவிடாதீர்கள். இப்பொழுது கவனியுங்கள். “ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?'' அவன் அதற்கு, ''உமக்குப் பின்னால் கூடாரத்தில் இருக்கிறாள்''என்றான். ''ஒரு உற்பவ காலத்திட்டத்தில் உன்னிடத்தில் திரும்பி வருவேன்'' என்றார். இருபத்தைந்து ஆண்டுகட்டு முன்னர் அதையே தான் வாக்குப் பண்ணியிருந்தார். ஆபிரகாம் நூறு வயதுள்ளவனாயிருந்தான், சாராள் தொண்ணூறு வயதுள்ளவளாய் இருந்தாள். “ஒரு உற்பவக் காலத்திட்டத்தில் உன்னிடத்தில் திரும்ப வருவேன்''. 65சாராள் வயது சென்றவளானாள், அவள் மனைவியாயிருப்பதற்கு, பெண்களுக்குரிய வழிபாடு எல்லாம் ஓய்ந்துவிட்டிருந்தது. தொண்ணூறு வயதைக் கடந்த எந்தவொரு பெண்ணுக்கும்... இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு, அவள் ஆபிரகாமுக்கு மனைவியாயிருந்தாள். அவர்கள் இருவரும் வயது சென்றவராயினர். அவள் தனக்குள் நகைத்தாள். ''சட்டையின் கைக்குள்ளாக நகைத்தாள்'' என்று நாம் சொல்லுகிறோமே, அது போல். “நான் வயது சென்றவளைப் போலவும், என் ஆண்டவன் ஆபிரகாம் முதிர்ந்த வயதுடையவருமாயிருக்க, எனக்கு அவரோடு, ஒரு மணவாட்டிக்குரிய சந்தோஷம் உண்டாயிருக்குமோ?'' என்றாள். அதை எண்ணினவளாய் அவள் நகைத்தாள். அந்த தூதனானவர் முதுகுப்புறமாக. கூடாரத்தை நோக்கித் திரும்பி, “இது நடக்கக் கூடாத காரியம் என்றும் எண்ணி சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். அது என்னவிதமான மனோ தத்துவமாக (telepathy) இருந்தது? 66லோத்தின் நாட்களில் நடந்ததைப் போலும், “மனுஷ குமாரனுடைய வருகையிலும் நடக்கும்”, என்று இயேசு சொன்னார். அங்கே பெயரளவில் இருந்த சபையானது, அவர்களின் தூதர்களைப் பெற்று இருந்தது. ஆனால் பரிசுத்த ஆவியின் தூதனோவெனில், தெரிந்து கொள்ளப்பட்ட சபையோடு இருக்கிறார். அதே காரியத்தை நடப்பிக்கிறார். அதுவே, அவரை நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கும் கிறிஸ்துவாகச் செய்கிறது, இந்த மணி நேரத்திற்குரிய தூதன் யார்? எந்த மனிதனுமல்ல! பரிசுத்த ஆவியானவரே இந்த மணி நேரத்திற்குரிய தூதன். அது என்ன? தேவன் மனித சரீரத்தில் வாசம் செய்கிறார் என்பதே. மகிமை! நான் பக்திவசப்படுகிறேன். ஆமென். தேவன் மாமிசத்தில் உங்கள் மத்தியிலே வாசமாயிருக்கிறார். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது (அது அவிசுவாசிகள்)! நீங்களோ என்னைக் காண்பீர்கள்'' (சபை). மறுபடியும், 'நான்' என்ற தனித்த பிரதி பெயர் சொல்லாக வருகிறது. ”உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடும், உங்களுக்குள்ளும்'' என்று இயேசு சொன்னார். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்! நம்முடைய தேவன் மரிக்கவில்லை! அவர் நித்திய நித்தியமாய் ஜீவனுள்ளவராயிருக்கிறார்! சூரியன் அஸ்தமனமாகும் இந்த கடைசி காலத்திலே அவர் ஜீவிக்கிறார். 67எப்பொழுதுமே சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் அஸ்தமனமாகிறது. உலகத்தின் நாகரீகமும் சூரியனோடு பயணமாயிற்று. நாம் அதை அறிந்திருக்கிறோம். மிகப் பழமையான நாகரீகம் சீனாவில் தோன்றியது. கிழக்கு தேசத்தின் ஜனங்கள் மீது தான் குமாரன் தோன்றி வெளிச்சத்தைப் பிரகாசித்தார். இப்பொழுது நாகரீகம் (அஸ்தமனம் வரை) பயணம் செய்திருக்கிறது. நாம்... சரியாக மேற்கு கடற்கரையில்! அதற்கு மேல் கடந்து சென்றால், நாம் மறுபடியும் கிழக்கிலிருப்போம். அடுத்து நிறுத்துமிடம் ஜப்பான் அல்லது சீனாவாக இருக்கும். அதையும் கடந்து சென்றால், மறுபடியும் கிழக்கில்தான் இருப்போம். நாகரீகம் சூரியபாதையில் பயணமாயிற்று. கிழக்கிலிருந்து மேற்காக. “ஒரு நாள் உண்டு. அது பகலுமல்ல, இரவுமல்ல. அது மப்பும் மந்தாரமுமான நாள்'' என்று தீர்க்கதரிசி சொன்னார். ஜனங்கள் சபையில் சேர்ந்து கொள்ளும் அளவிற்கு, தேவனை அறிந்திருந்தார்கள்; ஒரு சபையின் புஸ்தகத்தில் பெயரை பதிவு செய்துக் கொண்டு அவர்கள் பெற்றிருந்த வெளிச்சத்தில் நடந்தனர். அந்த மந்தாரமான நாளில் - சூரியன் மிகுந்த வெளிச்சத்தைக் கொடுக்கும்; இல்லையென்றால் நீங்கள் நடந்து செல்ல முடியாது. ஆனால், ''சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்'' என்று அவர் சொன்னார். அது என்ன? கிழக்கில் உதித்த அதே சூரியன் மேற்கில் அஸ்தமனமடைகிறது. கிழக்கிலே தோன்றி வெளிப்பட்ட அதே தேவகுமாரன், இந்த சாயங்கால நேரத்தில் மேற்கில் தோன்றியிருக்கிறார் அழைக்கப்பட்டு, பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட சபைக்கு சாயங்கால வெளிச்சமாக. 68கிறிஸ்து, தம் சொந்த இரத்தக் குழாய்களிலிருந்த இரத்தத்தினாலும், வல்லமையினாலும், அசுத்தமான கூட்டம் ஜனங்களை பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் அவர்கள் மத்தியிலே வாசமாயிருக்கிறார். ஆமென். அதன் படத்தை உங்களில் எத்தனை பேர் பார்த்திருக்கீறீர்கள்? அது இப்பொழுது பின்பக்கத்தில் இருக்கிறது. நீங்கள் சென்று அதைப் பார்க்கலாம். F.B.I என்ற துப்பறியும் இலாகாவில், கைரேகைகள் சம்பந்தப்பட்ட பொருட்களின் தலைமை பொறுப்பாளர் ஜார்ஜ் ஜே. லேஸி என்பவரால் பரிசீலிக்கப்பட்டது அது, மேலும், இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின அதே தூதன் இப்பொழுது இங்கேயும் இருந்துகொண்டு அதே கிரியைகளை இப்பொழுதும் செய்துக் கொண்டிருக்கிறார். அது இயேசுகிறிஸ்து என்ற நபரில் இருக்கும்பொழுதும் அதையே நடப்பித்தது. கிறிஸ்து, அந்த சரீரம், பிதாவின் வலது பாரிசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் கிறிஸ்துவில் இருந்த அந்த ஜீவனாகிய பரிசுத்த ஆவியானவர் திரும்ப வந்து சபையில் இருக்கிறார். இப்பொழுது கிறிஸ்து இல்லை... 69யோவான் 15ல் இயேசு ''நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள்'' என்றார், திராட்சைச் செடி கனிகொடுப்பதில்லை; கொடிகளே கனி கொடுக்கின்றன. இங்கே இருக்கிற நீங்கள், திராட்சைப் பயிரிடுகிறவர்கள், அதை அறிவீர்கள். திராட்சைச் செடியிலிருந்து தோன்றிய முதற்கனியானது முதற் சபையானது, அப்போஸ்தல நடபடிகளைத் தோற்றுவிக்குமானால், திராட்சைச் செடியானது இன்னொரு கிளையைப் பிறப்பிக்கும்போது - அந்த சபை - இன்னொரு அப்போஸ்தல நடபடிகளை எழுதச் செய்யும். ஏனெனில் திராட்சை செடியிலிருக்கும் அதே ஜீவனே, கொடிகளுக்கும் கொண்டு வரப்படுகிறது, உண்மை, இங்கே நாமோ, அநேக ஒட்டுப் போட்ட கிளைகளை பெற்றிருக்கிறோம். 70நேற்று பீனிக்ஸ், அரிஸோனாவில் வித்தியாசமான ஒன்பது கனிகளைக் கொண்ட எலுமிச்சை வகையைச் சேர்ந்த ஒரு மரத்தைக் கண்டேன். ஒருவரைப் பார்த்து, “சகோதரன் ஷாரிட்'' என்றேன். ”சகோ. ஷாரிட் அவர்களே, இது என்ன?'' என்றேன். ''எலுமிச்சை, தூதாயிம், ஆரஞ்சு இன்றும் பல'' என்றார். “அவைகள் எல்லாம் பிரித்தெடுக்கப்படும் பொழுது,'' என்றேன். ”அடுத்த ஆண்டு கனி கொடுக்கும் போது, அது ஆரஞ்சுக் கனிகளையா கொடுக்கும்? ஏனெனில் அது ஆரஞ்சு மரமாக இருக்கிறதே'' என்றேன். ''ஓ, இல்லை. எலுமிச்சை, தூதாயிம் இன்றும் அதன் கிளைகள் என்னவாக இருக்கிறதோ அவைகளைக் கொடுக்கும்'' என்றார். ''அது வினோதமாக இருக்கிறதே! ஆரஞ்சு மரத்தை நீங்கள் பல வகையான மரங்களாக மாற்றிவிட்டீர்கள்; அது தான் அர்த்தம் இல்லையா'' என்றேன். அதற்கு அவர் ''இல்லை, ஆரஞ்சுமரம் ஆரஞ்சு மரமாகவே இருக்கிறது'' என்றார், ''அது மற்றுமொரு கிளையை பிறப்பிக்குமானால், அது ஆரஞ்சுக் கனிகளைக் கொடுக்கும். ஆனால், இந்த விதமாக அதோடு ஒட்டு வைக்கப்பட்டுள்ள கிளைகள் எதுவோ, அதனதன் கனியைப் பிறப்பிக்கும். ஏனெனில் அது எலுமிச்சை வகையை சார்ந்த பல வகையாக கிளைகளை ஓட்டுப் போடப்பட்டதாகும்.'' “பார்த்தீர்களா'', என்றேன். ஸ்தாபனம், ஸ்தாபனத்தின் கனியை மட்டுமே பிறப்பிக்கும். ஆனால் உண்மையான திராட்சை செடியானது இன்னொரு கிளையை முளைப்பிக்குமானால், அது நேற்றும், இன்றும், என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவாயிருப்பார்! கர்த்தர் சொல்லுகிறார், 'நான் திரும்ப அளிப்பேன்' என்று. ஆமென். (வீடு செல்ல நேரமாகிவிட்டது). 71என்ன? “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'' அவர் எந்த விதமான ஆளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அவர் எந்த விதமாக இருந்தாரோ. அதேவிதமான ஆளையா? நீங்கள் தெருக்களில் சென்று ஒருவகையான அங்கி அணிந்தவராய், தலையைச் சுற்றிலும். ஆணிபடிந்த தழும்புகளுடனும் காணப்படும் ஒரு மனிதனை எதிர்பார்க்க வேண்டியதில்லை. மாய்மாலக்காரனால் கூட அதைச் செய்ய முடியும். அது தான் சரி. யாரும் ஒருவனால் அதை பாவனை செய்ய முடியும். ஆனால் கிறிஸ்துவுக்குள் இருந்த ஜீவன், அவருடைய சபையில் இருக்கும், அது தான் அது, அந்த ஜீவன்! பூசணிக் கொடியிலிருக்கும் ஜீவனை எடுத்து, திராட்சைக் கொடியோடு இணைக்கும் பொழுது! அது அந்தவிதமாக ஜீவிக்க முடிந்தால், அது பூசணியைத்தான் பிறப்பிக்கும் உண்மை. அதில் ஜீவன் இருக்கிறது. அந்தப் படியாகத்தான் அந்த ஜீவன் இப்பொழுது இருக்கிறது. கிறிஸ்துவின் ஜீவன் சபையில் இருக்கிறது. அது மறுபடியும் கிறிஸ்துவைப் பிறப்பிக்கிறது. இந்த விதமாக அவர்கள் கிறிஸ்துவைப் பார்க்கின்றனர். யோவான் 14:12-ல் அவர் சொன்னார், ''என்னை விசுவாசிக்கிறவன்'' பாவனையாக விசுவாசிக்கிறவன் அல்ல; ஆனால் ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறதை அவனும் செய்வான், இவைகளைக் காட்டிலும் பெரிதானவைகளைச் செய்வான், நான் என் பிதாவினிடத்தில் போகிறேன்'' இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். 72கிறிஸ்தவர்களே, நான் மிஷனரியாக இருப்பதினால், நூற்றுக் கணக்கான வேறுபட்ட தெய்வங்களைப் பார்த்திருக்கிறேன். புத்தம், ஜைனம், ஷியாக்கள் போன்ற இன்னும் பல தெய்வங்களை ஒருங்கே கண்டிருக்கிறேன். பாருங்கள், சமீப காலத்தில் இந்தியாவின் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தேன், (நடத்திய எல்லாக் கூட்டங்களைக் காட்டிலும், அங்கே அதிக ஜனங்களைப் பெற்றிருந்தேன். ஒரே கூட்டத்தில் மட்டும் ஐந்து லட்சம் பேர் வந்திருந்தனர். அங்கு ஜைனக் கோவிலுக்குள் சென்றேன். அங்கே, பதினேழு வகையான மதக்கோட்பாடுகளும், பதினேழு வகையான தெய்வங்களும், அவைகள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கு எதிரிடையாக இருந்தது. ஆனால் ஓ, என்னே, அவர் அங்கு காட்சியில் தோன்றினதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அந்த மதங்களை ஸ்தாபித்தவர்கள் அனைவரும் மரித்துவிட்டனர். ஆனால் நம்மவரோ, உயிர்த்தெழுந்தார். அவர் என்றென்றும் ஜீவனுள்ளவராயிருக்கிறார். தம்முடைய சபையில் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக ஜீவிக்கிறார். 73நாம் தலைவணங்குவோமாக. ஆண்டவராகிய இயேசுவே, உம்மைக் குறித்துப் பேசுவதில் மகிழ்ச்சியடைகிறோம். நீர் மிகுந்த அன்புள்ளவர் தகுதியுள்ளவர், என்று சொல்லப்படுவதற்கு உரியவராயிருக்கிறீர், ஆனால் பிதாவே, நானோ, மற்ற ஊழியரோ, அநேக வார்த்தைகள் சொல்வதைப் பார்க்கிலும் உம்மிடத்தில் இருந்து வரும் ஒரே சொல் பெரிதானவைகளைச் செய்பும். உமமிடத்திலிருந்து வரும் ஒரே சொல் அதை நிறைவேற்றும், பிதாவே, அதை இன்றிரவில் செய்யமாட்டீரா? இங்கே நாங்கள் அமர்ந்த வண்ணமாக, இன்னும் சிறிது நேரம் உமக்கு காத்திருக்கிறோம். நான் ஜெபிக்கிறேன். சிறிது நேரத்திற்கு மட்டுமல்ல, தேவனே, நீர் ஆயத்தமாகு மட்டும் நாங்கள் காத்திருப்போம். உம்மிடத்திலிருந்து கேட்க விரும்புகிறோம். இன்றிரவில் பரலோகப் பிதாவே, கூட்டத்தினரை அதிக நேரம் காத்திருக்க வைத்துவிட்டேன். ஆனால் தேவனே, அவர்கள் மிகுந்த அன்புடையவர்கள். சாயங்கால நேரத்துச் சூரியன் மறைந்துவிட்டது என்று அறிகிறேன். அதன் நிழலிலே நாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். தேவனே, உம்மை அறியாதவர்கள் இங்கு இருக்கலாம். தேவனே, பரிசுத்தாவியின் ரூபத்தில், ஜனங்கள் உம்மைக் காணும்படிக்கு, கடந்த நாட்களில் கண்ட அதே இயேசுவைப் பார்க்கும்படிக்கு, எங்களிடத்தில் இந்த இரவில் வரவேண்டுமாய் ஜெபிக்கிறேன். 74அது அந்த மனிதனோ, சரீரமோ அல்ல (அதை அவர்கள் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் தேவன் அதை எழுப்பினார்) ஆனால் அது அவருக்குள் இருந்த அந்த ஜீவன், “நான் எப்படி ஆடை அணிந்திருக்கிறேன். வந்து பாருங்கள், அதுவே நான் மேசியா என்பதன் அடையாளம்'' என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. ''வந்து பாருங்கள், எந்த பள்ளிக் கூடத்திலிருந்து வந்துள்ளேன், எந்த விதமான தத்துவத்தை நான் போதிக்கிறேன்'' இல்லை. அவர் தம்மை இவ்விதமாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் அவர் சொன்னார், ”என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாமலிருந்தால் என்னை விசுவாசியாதிருங்கள். ஆனால், பிதாவின் கிரியைகளை நான் செய்தும் என்னை நீங்கள் விசுவாசிக்கவில்லை, கிரியைகளை விசுவாசியுங்கள். அவைகளே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளாய் இருக்கின்றன. அவைகளே என்னை வெளிப்படுத்துகிறவைகளாக இருக்கின்றன'' நீர் மேசியா என்பதை அவாகள் கண்டார்கள். ஏனென்றால், நீர் தீர்க்கதரிசியாக, நீர் தேவன் - தீர்க்கதரிசியாக இருந்தீர். பிதாவே, இந்த இரவிலும், கிலியோப்பாவையும் அவனுடைய நண்பனையும் ஆசிர்வதித்தது போல, எங்களையும் ஆசிர்வதியும் என்று ஜெபிக்கிறேன். அதற்குப் பிறகு அவர்கள் “மூன்றரை வருடம் உம்மோடு கூட நடந்தார்கள்; நீர் செய்த கிரியைகளை அவர்கள் கண்டார்கள். பொந்தியு பிலாத்துவின் ஆதிக்கத்தில் நீர் சிலுவையில் அறையப்பட்டீர். சிலுவையில் அறையப்பட்டு, வேதனைகளை அனுபவித்து மரித்தீர். மூன்றாம் நாளிலே அவர்கள் எம்மாவூர் பாதையில் சென்றனர். அவர்கள் அந்தப் பெண்ணின் மூலமாகவும், சீஷர்களில் சிலர் மூலமாகவும் ”இவர் உயிர்த்தெழுந்தார்'' என்ற வதந்தியை கேட்டிருந்தனர். அந்த நாளிலே அவர்களோடு வழி நடந்தீர்; அவர்களோடு உரையாடினீர். அவர்கள் உம்மை அறியாதிருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இங்கே அநேகர் இருக்கலாம். நீர் அவர்களோடு நடந்தீர், உரையாடினீர். அவர்கள் அதை உணராதிருந்தனர். 75ஆனால், சாயங்கால நேரமான போது, உம்மை அவர்கள் உள்ளே அழைத்தனர். நீர் கதவுகளை அடைத்து உட்கார்ந்தீர். சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன்பு செய்த ஒன்றை அப்பொழுது செய்தீர். அது நீர்தான் என்பதை அப்பொழுது அவர்கள் அறிந்து கொண்டனர் நொடிப் பொழுதில், அவர்கள் கண்களிலிருந்து மறைந்து இரவில் கடந்து சென்றீர். அவர்கள். “கர்த்தர் உயிர்த்தெழுந்தார்!'' என்று சொல்லி தங்கள் ஜனங்களிடத்தில் சென்றனர். தேவனே, அதை மறுபடியும் இந்த இரவில் எங்களுக்குச் செய்யமாட்டீரா? இன்று இரவிலும், நீர் சிலுவையில் அடிக்கப்படுவதற்கு முன்பு செய்தது போல, ஏதாவது ஒன்றை எங்களுக்குச் செய்தருளும். அதன் பின்பு கிறிஸ்து மரிக்கவில்லை என்று அறிந்து உம்மிடம் விசுவாசம் வைப்போம். அவர் மரித்தோரிலிருந்து எழுந்து, நம் மத்தியிலே என்றென்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். பிதாவே, எங்களை உம்மிடத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். இந்த சபையையும், இங்கிருக்கும் ஒவ்வொரு ஆவியையும், நீர் எங்களை கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் விதமாக பயன்படுத்த வேண்டும் என்று அர்ப்பணிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 76இப்பொழுது, ஜெபிப்பதற்கு முன்பதாக, அல்லது ஜெப வரிசையை அழைப்பதற்கு முன் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒவ்வொருவரும் உங்கள் ஆசனங்களில் தயவு செய்து அமர்ந்திருக்கும்படி விரும்புகிறேன். இந்த சமயத்தில் பயபக்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கவில்லையெனில், நீங்கள் சென்றுவிடுவது நலமாயிருக்கும். விசுவாசிக்கப் போகிறீர்கள் என்றால் இன்னும் பதினைந்து நிமிடங்களுக்கு அமர்ந்திருங்கள். அவர் நம்மோடு பேசுகிறாரா என்பதைப் பார்ப்போம். ஒரு அரங்கத்தில் நாம் அமர்ந்துள்ளோம். ஆனால் இது சபை. அதற்காகவே இது பிரதிஷ்டை பண்ணப்பட்டது. ஆகவே உண்மையானது சம்பவிக்கும் மட்டும் நாம் அமர்ந்திருப்போம். உங்களில் ஒவ்வொருவரும் ஒரு ஆவியாயிருக்கிறீர்கள். உங்களில் ஆவியில்லையெனில், நீங்கள் மரித்தவர் என்று எண்ணப்படுவீர்கள். பாருங்கள்? நீங்கள் ஒரு ஆவியாயிருக்கும் பட்சத்தில், அப்பொழுதுதானே பரிசுத்தாவியானவர் அபிஷேகம் பண்ணுவதற்கென்று ஜனங்களின் மத்தியில் இறங்கிவரும்போது, அது ஆவியோடு தொடர்பு கொண்டு ஆவிகளைத் தேர்ந்தெடுக்கிறது. பாருங்கள். அங்கே அசைக்கப்படுகிறீர்கள். அங்கே ஒரு மாற்றம் உண்டாகிறது. ''ஓ, சகோ. பிரான்ஹாமே! கண் தெரியாத அந்த மனிதனை ஊருக்கு வெளியே ஏன் அழைத்துக் கொண்டு போனார்?'' என்று நீங்கள் கேட்கலாம். பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது உங்களில் எத்தனை பேர் அவரை விசுவாசிக்கிறீர்கள்? “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்''. 77மிகச் சிறிய ஜெப வரிசையைப் பெற்றிருக்கிறோம். அவர்களை அழைக்கப் போகிறோம். அவர்கள் அழைப்பார்கள் என நம்புகிறேன்... ஜெப அட்டை கொடுக்கப்பட்டுவிட்டதா... ஆம், ஒன்று முதல் நூறு வரையுள்ள ஜெப அட்டை கொடுத்துவிட்டானா? ஒன்று முதல் நூறு வரை. அது என்ன? சி, சி. (C.C) ஜெய அட்டையில் சிலவற்றை அழைப்போம். சி. எண் ஒன்று. அந்த எண்ணுள்ள அட்டை யாரிடத்தில் உள்ளது? சி. எண் ஒன்று. உங்கள் ஜெப அட்டையைப் பாருங்கள். உங்களில் அதை யார் வைத்துள்ளீர்கள்? எண் ஒன்று. அது சரி. அவர்கள் எந்த வழியாக, இந்த வழியாக அழைத்து வரப் போகிறீர்களா? அதுசரி. சி. எண் ஒன்று. எண் இரண்டு. அது சரி, ஸ்திரீயே எண் மூன்று. உங்களால் எழுந்திருக்க கூடுமா அல்லது உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அல்லது வேறு யாராவது அவர்களுக்கு உதவ முடியுமா? நான்... எண் மூன்று. யார் அந்த ஜெப அட்டையை வைத்துள்ளீர்கள்? அந்த மனிதன் அது சரி. எண் நான்கு, ஜெப அட்டை எண் நான்கு. அதுசரி. அதுசரி, என் நான்கு. எண் நான்கு உள்ள ஜெப அட்டை யாரிடத்தில் இருக்கிறது? உங்கள் கரத்தை தயவு செய்து உயர்த்துவீர்களா? அது சரி. ஸ்திரியே, இங்கே அருகே வாருங்கள். பாருங்கள், அவர்கள் சற்று... 78அந்தச் சிறுவன் செய்கிறது போல, அவர்கள் கீழே இறங்கி வந்து, இந்த ஜெப அட்டையைக் கையில் ஏந்திய வண்ணம் உங்கள் முன் வந்து நிற்பார்கள். அவன் அதைக் குலுக்கி, உங்களுக்கு ஜெப அட்டையைக் கொடுக்க ஆரம்பிப்பான். நீங்கள் ஒரு வேளை ஆறு என்ற எண்ணுள்ள அட்டையைப் பெறலாம். இன்னொருவர் பதினான்கு என்ற எண்ணுள்ள ஜெப அட்டையைப் பெறலாம். ஸ்திரீயே, இங்கே அருகில் வாருங்கள். நான்கு ஐந்து, பின்பு ஐந்து என்ற எண்ணுள்ள ஜெபஅட்டையை யார் வைத்துள்ளீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் ஐந்து. இன்னொரு காரியம். அவன்... சரியாக கீழே. ஸ்திரீயே இது. மேலும் இன்னொரு காரியம். இந்த விதமாக அவர்கள் செய்வார்கள். பின்பு சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து நான் அழைப்பேன்... எங்களுடைய கூட்டங்களில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாதவர்கள் எத்தனை பேர் உண்டு? ஓ நல்லது. நான் அந்நியர்கள் மத்தியிலே இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மையில் அப்படியில்லை. அது சரி. ஐந்து, ஆறு. ஆறு என்ற எண்ணுள்ள ஜெப அட்டை யாரிடம் உள்ளது? அது சரி. ஏழு, எட்டு, எட்டு, ஒன்பது. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு , நடக்கமாட்டாத ஜனங்களுக்காகவும், காது கேளாதவர்களுக்காகவும், இதை அறிவிக்கிறேன். ஒன்பது, பத்து எண் பத்து. பத்து, இதை ஸ்பானிஷ் மொழியில் எப்படிக் கூறுவோம்? பத்து. அதுசரி. பதினொன்று. ஜெப அட்டை எண் பதினொன்று. கட்டிடத்தின் முன் மண்டபத்தில் ஒருவர்... என எண்ணுகிறேன்... இங்கே அது சரி. பன்னிரண்டு. அது சரி. 79பன்னிரண்டு, பதின்மூன்று, ஜெப அட்டை எண் பதின்மூன்று. ஸ்திரீயே, அதை நீங்கள் பெற்றுள்ளீர்களா?பதினான்கு, பதினான்கு, பதினைந்து. நல்லது இந்த விதமாக இப்பொழுது நாம் ஆரம்பிப்போம். அது, சரி தயவுசெய்து, பயபக்தியுள்ளவர்களாய் அமர்ந்திருப்போம். உங்களில் எத்தனை பேர் ஜெப அட்டையில்லாமல், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துவார் என்று உள்ளத்தில் விசுவாசித்தவர்களாய் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்று கவலைப்படவில்லை. இதற்கு முன்பு இப்படிப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை அழைத்தபோது, இங்கே சுகமானவர்களைக் காட்டிலும் அதிகம் பேர் சுகமாக்கப்பட்டனர் என்பது தெரியுமா? உண்மையாக, ஜெப அட்டையில்லாமலேயே!சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டியதே கடமை. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களாக. எண் ஐந்து உள்ள ஜெப அட்டையை காணவில்லை வாயில் காப்போன் ஜெப அட்டை எண் ஐந்தை அழைக்கிறார். பாருங்கள். நீங்கள் எழுந்திருந்தால்... ஜெப அட்டையை நீங்கள் பயன்படுத்தவில்லையெனில், அதை வாங்காமல் விட்டுவிடுங்கள். ஜெப அட்டையைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவருக்காகவும் நாம் ஜெபிக்கப் போகிறோம். பாருங்கள், உங்கள் நேரத்தை இழந்துபோவதை நாங்கள் விரும்பவில்லை. மறுபடியும் அழைக்கும்போது, பதினைந்தில் முடித்தோம். நாளை இரவில் எந்த இடத்தில் விட்டோமோ அந்த இடத்திலிருந்து தொடங்குவோம், பாருங்கள். ஒவ்வொருவரையும் நாம் இங்கே அழைப்போம். இல்லையெனில் உங்கள் நேரத்தை இழந்துவிடுவீர்கள். இங்கே பாருங்கள். இப்பொழுது, ஜெப அட்டை எண் ஐந்து. எல்லாம் சரி. 80விசுவாசம் மட்டும் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ஜெப அட்டை வைத்துள்ள ஒவ்வொருவரும், அல்லது ஜெப அட்டை பெற்றிராதவர்களும் வரிசையில் சேர ஆயத்தமாகும் போது, விசுவாசமுள்ளவர்களாய், இந்த வழியாய், இப்பொழுது நோக்குங்கள். ஒரு காலத்தில் பெண் ஒருத்தி இருந்தாள், ஒரு வேளை அவளிடத்தில் ஜெப அட்டையில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் விசுவாசம் என்பதை எடுத்துக் கொண்டாள். கூட்டத்தின் மத்தியில் கடந்து சென்றவளாய், அவள் சொன்னாள்; ''நான் அவருடைய வஸ்திரத்தைத் தொடக் கூடுமானால், நான் சுகமாகிவிடுவேன்'' என்று. உங்களில் எத்தனை பேர் இந்தக் கதையை இதற்கு முன்பு கேட்டுள்ளீர்கள்? பெரும்பாடுள்ள அந்த ஸ்திரீ. அந்தச் சிறிய பெண் இயேசுவைத் தொடுவதற்குத் தீர்மானித்தாள். அவள் சொன்னாள், ''நான் அவரை விசுவாசிக்கிறேன், ஆசாரியர்களிலும், மற்றவர்களிலும், எத்தனை பேர் அவரை விசுவாசிக்கவில்லை என்பதைக் குறித்து கவலைப்படமாட்டேன். நான் அவரை நம்புவேன். அவருடைய வஸ்திரத்தைத் தொடக் கூடுமானால், நான் குணமாவேன் என்று விசுவாசிக்கிறேன். அவரை மேசியா என்று விசுவாசிக்கிறேன்''. 81நீங்கள் அவரை மேசியா என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென், ஆமென், என்று பதில் சொல்லுகின்றனர் - ஆசி.) உறுதியாக. இப்பொழுது நீங்கள் அவரைத் தொடக்கூடுமா? இப்பொழுது ஊழியக்கார சகோதரர்களுக்கு, ஊழியக்காரச் சகோதரர் எங்கேயிருக்கின்றனர்? எல்லாம் சரி. இப்பொழுது அந்த ஊழியக்காரர்... ஊழியக்கார சகோதரரே வேத வாசகர்களே, “அவர் இப்பொழுது எபிரெயர் நிருபம் 3வது அதிகாரத்தில், ''நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய (ஆங்கிலத்தில் touched - தொடப்படக்கூடிய) பிரதான ஆசாரியராயிருக்கிறார்'' என்று வேதம் சொல்லவில்லையா? இப்படி வேதம் சொல்வதை எத்தனை பேர் அறிவீர்கள்? உறுதியாக, நல்லது. அவர் பிரதான ஆசாரியராயிருப்பாராயின், அதே பிரதான ஆசாரியர் அதே சம்பவத்தை நிகழப் பண்ணமாட்டாரா? பாருங்கள்? அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால், (அது தான் நம்முடைய பொருள்) அதே சம்பவத்தை நடப்பிப்பார். இப்பொழுது நீங்கள் சொல்லலாம்... 82இப்பொழுது, நீங்கள் இங்கே மேலே வந்து, என்னைத் தொடுவீர்களானால், அது ஒரு சிறு மாற்றத்தையும் நடப்பிக்காது. மேய்ப்பர்களைத் (pastors) தொட்டாலும், ஒரு சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அங்கே இருக்கும் உங்கள் மேய்ப்பரைத் தொடுங்கள். யாராக அவர் இருப்பினும் சரி, அது ஒரு சிறு மாற்றத்தையும் உங்களில் கொண்டு வராது. ஆனால் அவரைத் தொடுங்கள்! நீங்கள் அவரைத் தொட்டதை எதனால் அறிவீர்கள்? அவர் ஆரம்பத்தில் என்ன செய்தாரோ, அதையே இப்போதும் செய்வார். பாருங்கள்? நீங்கள் அவரைத் தொடுங்கள். அவர் இப்பொழுதே, உங்கள்மத்தியிலே பேசி, “அது உங்கள் விசுவாசமே; உங்களுக்கு இன்னின்னது உள்ளது'' என்று சொல்லுகிறாரோ இல்லையோ பாருங்கள் - அது என்னவாயிருப்பினும், அது என்னவாக இருந்தது என்பதையும், என்ன சம்பவித்தது என்றும், அதைக் குறித்து எல்லாமே கூறுவார். அப்படிப்பட்ட சம்பவங்கள் நூற்றுக்கணக்கான சமயங்களில் செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்தவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்? நிச்சயமாக, அது பொய்ப்பதில்லை; பொய்ப்பதில்லை. ஏன்? அவர் தேவன். பாருங்கள்? நீங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கும், உண்மையாய் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருப்பதற்கும், கிறிஸ்துவின் கிடைக்கும் ஜெயத்திலும், நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா? 83இப்பொழுது வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், உண்மையாகவே பயபக்தியுள்ளவர்களாய் சொல்லக் கடவர்கள், ''நான் விசுவாசிக்கிறேன், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையோ, அல்லது என்ன சொல்கிறார்கள் என்று கவனிக்காமல், என் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பேன்.'' விசுவாசமுள்ளவர்களாய் இப்பொழுது நம்புங்கள். எல்லாம் சரியா? சரி. அங்கே பின்னால் இருக்கும். சகோதரர்கள், ஊழியக்காரர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், நோயாளிகளை கொண்டு வந்த வண்ணமிருக்கின்றனர். (ஆம், இப்பொழுது ஒலிபெருக்கி போடப்பட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். அவர்களில் ஒருவர் இப்பொழுது, ஒரு தொழில் நுட்பக்கலைஞன், ஒலிபெருக்கத்தை சற்று உயர்த்தி வைத்தால் நல்லது). சில நேரங்களில் அபிஷேகம் என்னை ஆட்கொள்ளும் போது, நான் என்ன சொல்கிறேன் என்பதே எனக்குத் தெரியாது, பாருங்கள். அப்படி நான் இருக்க வேண்டியிருக்கிறது. அது முன்பு நிகழ்ந்த சம்பவத்திற்கு கொண்டு செல்கிறது, பாருங்கள். பின்பு நான்... நீங்கள் கனவு காண்பது போல அது உங்களுக்கு அதை விளக்கிச் சொல்ல வேண்டுமானால், நாம் கனவு கண்டதைப் போலிருக்கும், இருப்பினும் நீங்கள். இங்கேதான் நின்று கொண்டிருக்கிறீர்கள்; ஜனங்களுடைய வாழ்க்கையில் அநேக வருடங்களுக்கு முன் என்ன நிகழ்ந்தது, அவர்கள் என்ன செய்தார்கள், என்ன காரணத்தினால், வாழ்க்கையில் இப்படி நேர்ந்தது என்று கண்டு எடுத்துரைப்பது. பாருங்கள், அது தான் பரிசுத்த ஆவியானவர். அது என்ன சம்பவித்தது, என்ன நிகழ்கிறது, நடக்கப் போகிற காரியங்கள் என்னவென்பதை சொல்கிறது. அதை உற்றுநோக்கி, நெருங்கி கேளுங்கள், ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்ளுங்கள், அது உங்களுக்குச் சொல்லும். 84இங்கே ஒரு மனிதன, ஒருவேளை என்னிலும் சற்று அதிக வயது சென்றவராயிருக்கலாம். இங்கே நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். நான் அறிந்த மட்டும், உங்களுக்கும் எனக்கும் இதுதான் முதல் சந்திப்பு. ஒருவருக்கொருவர் அந்நியராயிருக்கிறோம் (அந்த மனிதன் சொல்கிறார். உங்களுடைய கூட்டத்தில் இருந்திருக்கிறேன் என்று - ஆசி.) நீங்கள் கூட்டங்களில் இருந்திருக்கிறீர்கள். ஆம். (ஆனால் உங்களை ஒருபோதும் சந்தித்ததில்லை) அவர் என்னுடைய கூட்டங்களில் இருந்திருந்ததாக சொல்கிறார். அவர் ஒருபோதும் என்னைச் சந்திக்கவில்லை. நான் அறிந்திராத லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஆனால் இங்கே நாம் இரண்டு பேரும் வாழ்க்கையில் முதல் முதல் சந்திக்கிறோம். அங்கே நின்று கொண்டிருக்கிறாரே அவர்தான். அவரை எனக்குத் தெரியாது. என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் சந்தித்ததில்லை. எங்கோ நடந்த கூட்டத்தில், கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்தவாறு என்னை அவர் பார்த்திருக்கிறார். அங்கே அவர் நின்றுக் கொண்டிருக்கிறார். 85ஒருவேளை அந்த மனிதன் ஒரு பாவனை விசுவாசியாக இருக்கலாம். ஒருவேளை அவர் ஒரு விசுவாசியாகக் கூட இருக்கலாம். ஒருவேளை அவர் விசுவாசியாயில்லாமல் கூட இருக்கலாம்; எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர் சாதாரண ஒரு மனிதனாகக் கூட இருக்கலாம். ஒருவேளை அவர் நோயுற்றவராக இருக்கலாம், ஒருவேளை அவர் நோயற்றவராகக் கூட இருக்கலாம். ஒருவேளை குடும்பப் பிரச்சனையாக இருக்கலாம்; பணப் பிரச்சனையாக இருக்காலம்; ஒருவேளை அவர் மற்ற ஒருவருக்காக அங்கே நின்று கொண்டிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அங்கே நிற்கிறார். நான் இங்கே இருக்கிறேன். “இப்பொழுது, ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்''. நான் அந்த மனிதனுக்கு என்ன செய்யக்கூடும்? இப்பொழுது அவர் மட்டும் நடந்து சென்று, அவர் மீது என் கையை வைத்து, “ஐயா, நீங்கள் வியாதியுற்றிருக்கிறீர்களா''? என்று கேட்கக்கூடும். ”ஆம், ஐயா'' என்று அவர் சொல்வார். என்னுடைய கரங்களை அவர் மீது வைத்து, “தேவனுக்கு மகிமை, அல்லேலூயா! போங்கள், நீங்கள் சுகம் பெறப்போகிறீர்கள், அல்லேலூயா'' என்று நான் சொல்லலாம். நல்லது. ஒருவேளை அவர் குணமடையலாம். அதைக் குறித்து அவர் என்ன எண்ணுகிறார் என்பதைப் பொறுத்தது. அவரைக் குலுக்கி, என்னுடைய கரத்தை அவர் மீது வைப்பதனால், அவரில் எதையும் அது நடப்பிக்காது. தேவனில் அவர் வைத்திருக்கிற விசுவாசமே அதை செய்யும். ஆனால் இப்பொழுது அதைக் குறித்து அவர் சந்தேகிப்பதற்கு உரிமை உண்டு. ஆனால், பரிசுத்த ஆவியானவர் இங்கே நின்றுக் கொண்டு, என்னவாக இருந்தார் என்பதை அவருக்கு சொல்லக் கூடுமானால், மோசே ஆதியாகமத்தை எழுதினது போல உண்மையாகவே இனி என்ன நடக்க இருக்கிறது என்பதை அவர் சொல்லிவிடுவார். அவர் அதை விசுவாசிப்பாரல்லவா! இப்பொழுது அவர் அதைச் செய்வாரானால், கிறிஸ்து அதைச் செய்வாரானால், உங்களில் எத்தனை பேர் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிப்பீர்கள்? 86பாருங்கள், அமெரிக்காவில் ஒரு குற்றத்தைத்தான் பார்க்கிறேன். அவர்கள் அதிகமாக கண்டதனால் பார்வையாளர்களாகவே இருந்துவிடுகின்றனர். பாருங்கள், அப்படிச் செய்யாதீர்கள். கிறிஸ்துவை கனப்படுத்துங்கள். என்னில் கவனம் செலுத்தாதிருங்கள். கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி நான். ஆனால், இப்பொழுது தேவன் என்னை எவ்வளவாய் அபிஷேகித்தாலும், அந்த மனிதனையும் அவர் அபிஷேத்கித்து ஆக வேண்டும், அது சரி. இல்லையென்றால் அது ஒரு சிறு நன்மையையும் செய்யாது. அவர் அந்த மனிதனையும் அபிஷேகிக்க வேண்டும். அவர் உங்களையும் அபிஷேகிக்க பரிசுத்த ஆவியானவர் இறங்கவேண்டும். அப்படியானால், இது ஒரு வாய்க்காலைப்போல, நானாக அதை பேசுவதில்லை. அவர் என் மூலமாக பேசுகிறார். அதுவே தேவன் பேசுவதற்கு பயன்படுத்தும் வழி. பாருங்கள், அது ஒரு ஒலிபெருக்கிக் கருவியைப் போல, ஒருவர் அற்குப் பின்னால் நின்றுக் கொண்டு அதன் வழியாகப் பேசவில்லையெனில் அது ஒரு ஊமையே, மேலும் என்னை பொறுத்த மட்டில் அந்த மனிதனை நான் எப்படி அறிவேன்? ஒருபோதும் அவரைப் பார்த்ததில்லை. அவருக்கு நான் ஒரு ஊமை பாருங்கள்? 87ஆகவே, “ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்'' அவர் இப்பொழுது என்ன செய்ய விரும்புகிறார்? ஒரு மனிதன் வியாதிப்பட்டிருந்தால் அவர், ”நான் உன்னைச் சுகமாக்கப் போகிறேன்'' என்று சொல்வாரா? அதை அவரால் செய்யக்கூடாது, ஏற்கனவே செய்துவிட்டார் பாருங்கள்? ''அவருடைய தழும்புகளால் குணமானோம்“ அதை அவர் கல்வாரியில் செய்து முடித்தார். ஆனால் அவர் மேசியா என்பதை காண்பிக்க, அவர் ஏதோ ஒன்றைச் செய்வார். அதுசரியா? அப்படியானால், அவர் என்ன சொல்வார்? ''என்னுடைய அணி படிந்த தழும்புகளை பார்'' என்று சொல்வாரா? அப்படியல்ல, அப்படியல்ல, ஆரம்பத்தில் அவர் அப்படிச் சொல்லவில்லை. அவர் ஒரு போதும்... அவர்களுடைய இருதயத்திலுள்ளதைச் சொன்னார். அவ்வளவுதான், அவரை மேசியா என்று அவர்கள் அறிந்துக் கொண்டனர் அது அவரே, நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார், இதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், ”ஆமென்“ என்று சொல்லுங்கள். (சபையார் ”ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 88நீங்கள் சொல்லலாம், “சகோ. பிரான்ஹாமே, எதற்கு நீங்கள் தாமதிக்கிறீர்கள்?'' என்று. கர்த்தருடைய தூதனானவருக்காக. ஆம். நானாக எதையும் செய்ய முடியாது. அதற்காகவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை அபிஷேகிக்கவில்லையெனில், நானாக ஒன்றும் பேச முடியாது அதை சார்ந்த... அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். இங்கே இருக்கிறார். இப்பொழுது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், தேவனுடைய மகிமைக்கென்று ஒவ்வொரு ஆவியையும் எனக்கு கீழாக கொண்டு வருகிறேன். ஐயா, உங்களை எனக்குத் தெரியாது. நாம் அந்நியர்களாயிருக்கிறோம். ஏதோ ஒன்றில் கலந்து கொண்டவர்களாய்... அல்லது, ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை உணர்ந்தவர்களாய் இருக்கிறீர்கள். அந்த மனிதன் தன் வாழ்க்கையை மறைக்கக் கூடாது. அவர் வியாதியுள்ளவர். அவரைச் சுகப்படுத்த என்னால் கூடாது. அவரை சுகப்படுத்த எனக்கு ஒரு உபாயமும் இல்லை. அந்த மனிதன் மருத்துவரிடத்தில் இருந்திருக்கிறார். அந்த மனிதன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்திருக்கிறார். உண்மையாக, ஒரு அறுவைச் சிகிச்சைக்காக சென்றிருந்தீர்கள். அதுசரியா? அது உண்மையாயிருப்பின் ஐயா, உங்கள் கரத்தை உயர்த்துங்கள். விசுவாசிக்கிறீர்களா? (சபையில் யாரோ ஒருவர் 'ஆமென்' என்கிறார் - ஆசி). 89நீங்கள் சொல்லலாம், “சகோ, பிரான்ஹாமே, நீங்கள் ஊகித்துச் சொல்லுகிறீர்கள்'' என்று. நான் அப்படி ஊகிக்கவில்லை. மறுபடியும் உற்றுப் பாருங்கள். ஐயா, இந்த பக்கமாய் பாருங்கள். நம்முடைய கர்த்தர் ஒரு ஸ்திரீயினிடத்தில் பேசினது போல. இது அவருடைய ஆவி. நான் அவரல்ல. நான் உங்களைப் போல் ஒரு மனிதன்; ஆனால் இது அவருடைய ஆவி. அவர் என்னவெல்லாம் சொன்னாரோ, அது சரியாயிருந்தது. ஆம். அது இப்பொழுது இங்கே மறுபடியும் சம்பவிக்கிறது. ஆம், அந்த மனிதன் சிறுநீர்ப்பையினால் ஏற்பட்ட பிரச்சனைக்கு, அறுவை சிகிச்சை செய்ய ஆயத்தமாயிருந்தார். கைவிடப்பட்ட, உதவியற்ற நிலையில் இருந்தார். அது பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது. அது சரியா? அப்படியானால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் இருப்பதை உணருகிறீர்களா? சரி. விசுவாசத்தோடு புறப்பட்டுச் செல்லுங்கள். சுகமாக்கப்படுவீர்கள். ஆமென். விசுவாசிக்கிறீர்களா? கிறிஸ்துவின் அசைவைக் கண்டு கொள்வது அவ்வளவு எளிமையாக இருக்கிறது. 90இப்பொழுது, ஸ்திரீயே, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். இங்கே ஒரு... கூட்டத்தில் பங்கு பெற்றிருந்திருக்கிறீர்கள், “அந்நியர்'' என்று நான் சொல்லும் போது, அது, உங்களை எனக்குத் தெரியாது, என்னை உங்களுக்குத் தெரியாது என்று பொருள். மேலும் நான்... கூட்டங்களில் என்னையும், இந்த விதமான சம்பவங்களையும் கண்டு இருக்கிறீர்கள். ஆனால், ''ஆம். சகோ. பிரான்ஹாமே, என் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், உங்களை எனக்குத் தெரியும், நாம் அந்நியோந்திய நண்பர்கள்'' என்று உங்களால் சொல்ல முடியுமா? அந்தபடியாய் நான் உங்களை அறியவில்லை. எங்கோ நடந்த கூட்டமொன்றில் இருந்திருக்கிறீர்கள். உங்களைக் குறித்ததான காரியம் ஒன்றும் தெரியாது. நீங்கள் ஒரு பெண் என்றும், எங்கோ நடந்த கூட்டமொன்றில் இருந்திருக்கிறீர்கள். அவ்வளவே. அங்கே ஒரு மனிதன். இங்கே ஒரு பெண்மணி. 91பரி.யோவான் 4ல் ஒரு காட்சி. ஒரு மனிதனும் ஒரு பெண்ணும் வாழ்க்கையில் முதல் முதலாக, முகமுகமாகச் சந்திப்பது. சமாரியா நாட்டு ஸ்திரீயும், நம்முடைய ஆண்டவராகிய இயேசுவும். இப்பொழுது இங்கே ஒரு ஸ்திரீ. அவளை எனக்குத் தெரியாது, ஒருபோதும் அவளைக் கண்டதில்லை முழுவதுமாக அவள் எனக்கு ஒரு அந்நிய ஸ்திரீ. பரலோகத்திலிருக்கிற தேவன் அதை அறிவார். ஒருபோதும் அவளைக் கண்டதில்லை. ஆனால், அவள் எதற்காக இங்கே இருக்கிறாள் என்றும், யாருக்காக என்றும், வீட்டுப்பிரச்சனை, பணப்பிரச்சனை, நோய் அல்லது எதுவாக இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் அவள் எதற்காக இங்கே இருக்கிறாள் என்பதைச் சொல்வாரானால், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இதை நடப்பிக்கிறது என்பதை அவள் ஒத்துக் கொள்ள வேண்டும். இது சரியா? பாருங்கள், அது நீங்கள் என்னவென்று எண்ணுகிறீர்கள் என்பதைச் சார்ந்துள்ளது. “பெயல்செபூல்'' என்று நீங்கள் சொல்லலாம், அல்லது ”கிறிஸ்து'' என்றும் சொல்லக்கூடும். “பெயல்செபூல்” என்று அழைப்பீர்களானால், அதற்குரிய அவருடைய பலனைப் பெறுகிறீர்கள். “கிறிஸ்து'' என்று அழைப்பீர்களானால் அது அவருடைய பலன். நீங்கள் நம்ப வேண்டும். அது உங்களை எந்த ஸ்தானத்தில் வைக்கிறது? என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள யாரேனும் விரும்புகின்றீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையெனில், இங்கே வந்து, ஒருமுறை என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுங்கள் (சகோ. பிரான்ஹாம் தாமதிக்கிறார் - ஆசி) இப்படிக் கேட்கும்போதெல்லாம் எல்லா நேரங்களிலும் பார்வையாளர்கள் அமைதல் உள்ளவராயிருக்கின்றனர். 92இப்பொழுது சகோதரியே. இங்கே பாருங்கள். நான் சுற்றிப் பார்த்து, ஏன் உங்களை, 'சகோதரி' என்று அழைத்தேன் தெரியுமா? என்னுடைய முதுகுப் பக்கத்தை உங்களை நோக்கி வைத்திருந்தேன். உங்களில் இருக்கும் ஆவியினால், நீங்கள் ஒரு கிறிஸ்தவள் என்பதை உணர்ந்தேன். நீங்கள் ஒரு விசுவாசி. உங்களை நான் அறியேன், ஆனால் நீங்கள் கிறிஸ்தவர் என்பதை அறிவேன். ஏனென்றால் உங்களில் இருக்கிற ஆவியும், என்னில் இருக்கிற ஆவியும் சம்பந்தமுள்ளது, பாருங்கள், நீங்கள் வரவேற்கப்படுவதை உணருகிறீர்கள். அது உங்களுக்கு நல்லுணர்வைத் தருகின்றது. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். இப்பொழுது, இயேசு கிணற்றண்டையில் இந்த ஸ்திரீயோடு பேசினது போல, சீகார் பட்டணத்தின் கிணற்றண்டை நடந்த அந்தச் சின்னக் காட்சியை போல - பரிசுத்தாவியானவர் நம்மோடு பேசுகிறார். இங்கே தான் நாம் இருக்கிறோம். இங்கே நாம் இருக்கிறோம், நான் அதைக் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறேன். நாம் இருவரும் விசுவாசிகளாக இருக்கும்பட்சத்தில் நாம் இங்கே நின்றுக் கொண்டிருக்கிறோம். நம் இருவரிலும் ஆவியானவர் இருக்கிறார். இப்பொழுது அவர் கொடுத்தார்... நான் ஒரு பிரசங்கியல்ல, ஆனால் அவர் எனக்கு ஒரு வரம் கொடுத்தார்; அது தான் என்னுடைய பிரசங்கம். அது ஒரு தீர்க்கதரிசன வரம். இவைகள் எல்லாம் தற்காலிகமானதே; அதை செய்வதற்கு உங்கள் விசுவாசம் அவசியம். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீயினிடத்தில் சொல்லப்பட்டது போல, ''உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' அதே சம்பவம் இப்பொழுது நடக்கிறது. பாருங்கள், அது உங்கள் விசுவாசத்தை எடுத்துக் கொள்கிறது. பின், ஏதோ ஒன்றை அவர் சொல்கிறார், எங்கே செல்லவேண்டும் போன்ற குறிப்பிட்டவைகளை. 93இங்கே, அவர் சமாரியாவின் பக்கமாய் செல்ல வேண்டியதாயிருந்தது. நான் இப்பொழுது அலாஸ்கா பட்டணத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஆனால், நான் இந்தப் பக்கமாய் வரவேண்டியதாயிற்று. ஏன்? இங்கே வருவதற்கு நான் ஏவப்பட்டேன். நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த மேடையின் மேல் வந்திருக்கிறீர்கள். அது மட்டுமே அறிந்துள்ளேன். இங்கே நின்று கொண்டிருக்கிற நீங்கள் ஒரு கிறிஸ்தவள். நானும் ஒரு கிறிஸ்தவன். இருவருமே பரிசுத்த ஆவியையுடையவர்களாயிருக்கிறோம். இங்கே அவருடைய வார்த்தையிருக்கிறது. அதாவது அவர் நேற்றும், இன்றும், என்றும் மாதவராயிருக்கிறார் என்று. இப்பொழுது, உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒன்றை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவாரானால், அது உண்மையா, அல்லவா என்பதை அறிந்துக் கொள்வீர்கள். நீங்கள் எதை கேட்டாலும் அதை பெற்றுக்கொள்வோம் என்னும் விசுவாசத்தை உங்களுக்குத் தருவார். ஏனெனில் எந்தவித தேவையும் இல்லாமல் ஒரு கிறிஸ்தவர் அப்படி நிற்கமாட்டார். அப்படியில்லாவிட்டால் நீங்கள் அங்கே நிற்கமாட்டீர்கள். ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா? உங்களில் யாராவது இந்த நபரை அறிந்துள்ளீர்களா? ஆம், அந்த நபரை அநேகர் அறிந்துள்ளனர். 94நல்லது, வைத்திய முறைப்படி, நீங்கள் ஒரு அறுவைச் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். அது ஒரு கட்டி (cysts). அது சரி. அந்தக் கட்டி எங்கே இருந்தது என்பதை பரிசுத்தாவியானவரால் எனக்கு வெளிப்படுத்த முடியும். என்பதை விசுவாசிக்கிறீர்களா? இது சிறுநீரகமே. அதுசரி. இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இந்த பட்டணத்தில் உள்ளவர்கள் அல்ல. இருநூறு அல்லது முந்நூறு மைல்களுக்கப்பால் இருந்து வந்துள்ளீர்கள். இங்கே வருவதற்கென்று, நீண்ட தூரப் பயணம் செய்திருக்கிறீர்கள். அது சரி. அது சரி அது மாத்திரமல்ல, நீங்கள் ஒரு ஊழியக்காரனின் மனைவி. தேவன் நீங்கள் யாரென்பதை சொல்லக்கூடும் என்று விசுவாசிக்கின்றீர்களா? அது உங்களுக்கு உதவுமா? திருமதி. ஜான்சன், விசுவாசித்து சென்று சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும். முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள்? இயேசு கிறிஸ்து! ''ஐயன்மீர், நாங்கள் காண விரும்புகிறோம்''... அது எப்படி என்று நீங்கள் சொல்லலாம். நல்லது, அங்கிருந்த மற்றவர்களிடம் அவர் சொன்னதைக் காட்டிலும் இது வித்தியாசப்பட்டதல்ல. விசுவாசிக்கிறீர்களா? “ஐயன்மீர், நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்''. அது அவர்தான். இப்பொழுது அவளிடத்தில் சென்று பேசி அவளைக் கேளுங்கள். 95இங்கு ஒரு மனிதன் இருக்கிறார். முற்றிலுமாக அவர் அந்நியர். அவரைத் தெரியாது. என்னுடைய வாழ்நாளில் அவரைக் கண்டதில்லை. புற்று நோயினால் அவர் தின்னப்பட்டிருக்கலாம்; ஒருவேளை குடும்பப் பிரச்சனையாகவோ, பணப்பிரச்சனையாகக் கூட இருக்கலாம். அவருக்கு என்ன குறை உள்ளது என்பது தெரியாது. அவர் இங்கே ஒரு மனிதனாக நின்றுக் கொண்டிருக்கிறார். பரிசுத்தாவியானவர் அந்த மனிதனுக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அறிந்து கொள்வீர்கள்... இங்கே பின்னால், என் விரல் சுட்டிக்காட்டும் இடத்தில் அந்த ஸ்திரீ தோல் சம்பந்தப்பட்ட வியாதியால் பீடிக்கப்பட்டவர்களாய் உட்கார்ந்திருக்கிறார்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப்பீர்களானால்! உங்கள் முழு இருதயத்தோடும் இதை விசுவாசிக்கிறீர்களா, ஸ்திரீயே? கொஞ்சம் தலை நரைத்துப் போனவர்களாய், கண்ணாடி அணிந்து, தோல் வியாதியால் பாடு அனுபவிக்கிறவர்களாய் இருக்கிறீர்கள். அவர்கள் அங்கே நின்று கொண்டோ அல்லது அங்கே உட்கார்ந்து கொண்டோ, தன்னில் என்ன குறைபாடு உண்டு என்று எண்ணினவர்களாய் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையானால், தேவன் சுகப்படுத்துவார் என்று விசுவாசித்து எழுந்து நில்லுங்கள். அவள் யாரைத் தொட்டாள்? உங்களைக் கேட்கிறேன், அவள் யாரைத் தொட்டான்? அவள் என்னிலிருந்து இருபது கெஜ தூரத்தில் இருக்கிறாள். அவள் பிரதான ஆசாரியரை தொட்டாள். அந்த பிரதான ஆசாரியர் இங்கே இருக்கிறார்! அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். நீங்கள் பார்க்கவில்லையா? அதைக் குறித்து சந்தேகம் கொள்ளாதீர்கள். விசுவாசியுங்கள். விசுவாசம் கொள்ளுங்கள். 96ஐயா, என்னால் ஒன்றும் செய்ய முடியாது, ஒரு ஒளியை உற்றுப் பார்க்கிறேன். பாருங்கள். அது என்னிலிருந்த புறப்பட்டுச் சென்றது. அது அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதைப் பார்க்கிறேன். அந்த சிறிய பெண் எனக்கு முன்பாக வந்து நிற்கிறதைப் பார்க்கிறேன். எனக்கு முன்பாக வந்து கொண்டிருந்தாள். அது நான் பார்த்தபோது, ஆணயிராமல், பெண்ணாயிருந்தது. ஆகவே எதைப் பார்த்தேனோ அதன் பேரில் சற்று பேச வேண்டியவனானேன். ஓ, இந்தச் சபையாரும், இந்தக் குழுவினரும் இப்பொழுதே விசுவாசிப்பார்களென்றால், விசுவாசம் கொண்டவர்களாய், என்ன சம்பவிக்கும்! என்னவெல்லாம் நிகழும்! ஐயா, நாம் ஒருவருக்கொருவர் அந்நியராயிருக்கிறோம். உங்கள் ஆவியோடு தொடர்பு கொள்வதற்காக, உங்களோடு பேச விரும்புகிறேன். நீங்கள் உங்களுக்காக இங்கே இருக்கவில்லை, இன்னொருவருக்காக இருக்கிறீர்கள். உந்து வண்டியில் விபத்துக்குள்ளாகி, சிராய்ப்புகளையும் பெற்று, துண்டு துண்டாக வெட்டப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அந்த சிறுவனுக்காக. அவனுக்காகவே இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள். அதுசரியா? தேவன் அவனுக்கு உதவி செய்யவில்லையென்றால், அவன் சாகத்தான் வேண்டும். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? என்னுடைய ஜேபியிலிருந்து உறுமாலை எடுங்கள்; சென்று, கர்த்தருடைய நாமத்தில், அவிசுவாசப்படாமல், அதை அவன் மேல் போடுங்கள். அவனிடத்திலிருந்து வரும் செய்தியை, இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே நான் கேட்கட்டும். விசுவாசம் கொள்ளுங்கள். 97ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். வேறொரு ஸ்திரீ விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது ஒன்றை நினைவில் வையுங்கள், அங்கே இருந்த அவரே இங்கேயும் இருக்கிறார். எல்லா இடங்களிலும் அவர் இருக்கிறார். எங்கும் இருக்கிறார். (சகோ. பிரான்ஹாம் தாமதிக்கிறார் - ஆசி.) சகோதரி பார்டர்ஸ் அவர்களே, அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது நீங்கள் தானே? தெளிவாய்த் தெரியவில்லை. சகோதரி பார்டர்ஸைப் போலத் தோற்றமளிக்கிறார்கள். என்னால் முடியவில்லை... ராய், சகோ. ராய் பார்டர்ஸின் மனைவி. நான் நினைப்பது சரியா? அது புறப்பட்டுச் சென்று சரியாக அந்த பெண்ணுக்கு மேலாக நின்றது. சற்று பொறுங்கள். அது நம்மைத் திரும்ப அழைக்கும். அது எதை நடப்பித்தது என்பதைப் பார்ப்போம். உங்களுக்கு நான் அந்நியன், நம் இருவரையும் தேவன் அறிவார். இங்கே நீங்கள் எதற்காக இருக்கின்றீர்கள் என்றும், இங்கே ஒன்றை சம்பவிக்கச் செய்து, தேவன் அதை விவரித்து சொல்வாரானால், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா? (அந்த சகோதரி “ஆம்'' என்று சொல்லுகிறார்கள் - ஆசி) 98திருமதி. பார்டர்ஸ் அவர்கள் எனக்கு முன் நின்று கொண்டிருக்கிற காட்சி வருகிறது. நான்... திருமதி. பார்டர்ஸ் அவர்கள் இந்தக் கூட்டத்தில் எங்கோ இருக்கிறார்கள். (சகோ. பிரான்ஹாம் சகோ. ராய் பார்டர்ஸிடம், “உங்கள் மனைவிக்கு ஏதேனும் கோளாறு உண்டா? என்று கேட்கிறார் - ஆசி) சரி. அந்தக் காட்சி என் கண்முன் வந்து கொண்டேயிருக்கிறது. ஒரு கூட்டம் ஜனங்கள் அவர்களுக்கருகில் இருக்கின்றனர். அது என்னவென்று அதிசயமடைகிறேன். சதை வளர்ச்சியால் (tumor) கஷ்டப்படுகிறீர்கள். அதுசரி. சதை வளர்ச்சி எங்கேயிருக்கிறது என்பதை தேவன் எனக்கு சொல்லக் கூடும் என்று நம்புகிறீர்களா? இடுப்பில், முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இன்னும் சிக்கலான நோய்கள் உங்களுக்குண்டு. விசுவாசியுங்கள். அது சரி. உங்கள் முழு உள்ளத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? (சகோதரி, 'ஆம்' என்று சொல்லுகிறார்கள் - ஆசி.) விசுவாசித்த வண்ணம் புறப்பட்டுச் செல்லுங்கள். சகலமும் மறைந்து போகும். தேவன் உங்களைக் குணமாக்கி, நன்மையைக் கட்டளையிடுவார். (அந்தச் சகோதரி சொல்கிறார்கள், ''சகோ. பிரான்ஹாம், தோல் வியாதியோடு அந்த ஸ்திரீ என்னுடன் வந்தாள். பின்னால் வந்து அமர்ந்த பிறகே, அவள் தனக்கு தோல் வியாதி இருப்பதாகச் சொன்னாள்'') பாருங்கள், அது அவள் ஜெப வரிசையில் சேர்ந்துக் கொள்ளும் போது. அவளை மெய்சிலிர்க்க வைத்து, உங்களிடம் அதை கூற செய்திருக்கும். ஒருவருக்காக ஒருவர் ஜெபித்தல். 99அது இங்கே இருக்கிறது! ஓ, அதை பார்க்கிறேன்! திருமதி பார்டர்ஸ் நின்று, அவர்கள் ஜெபிப்பதைப் பார்க்கிறேன். அவர்களுக்கருகில் ஒரு ஸ்திரீ அமர்ந்திருக்கிறார்கள். குறைந்த இரத்த அழுத்த நோயுடன், ஜெபித்தபடி இருக்கிறார்கள், அங்கே அமர்ந்த வண்ணமாக விசுவாசிப்பீர்களானால், ஸ்திரியே, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அந்த இரத்த அழுத்த நோயிலிருந்து உங்களை குணமாக்குவார். ஆமென். பார்த்தீர்களா? அங்கிருந்து தான் ஜெபம் வந்தது. நீங்கள் என்னை ஒரு தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கவில்லையெனில் மன்னியுங்கள் - அல்லது ஊழியக்காரன் என்று (தீர்க்கதரிசியென்பது ஜனங்களை இடறலடையச் செய்கிறது) உங்கள் கரத்தை அருகிலிருக்கும் அந்த பெண்மணி மீது வையுங்கள், ஏனென்றால் அவர்கள் காலில் நரம்புகள் சுருண்டு வீங்கிய வண்ணம் காணப்படும் ஒருவித நரம்பு சம்பந்தப்பட்ட வியாதியால் (Varicose veins) அவதிப்படுகிறார்கள். பாருங்கள், அது சரி. ஆமென். இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்! அவர்கள் யாரைத் தொட்டனர் என்று எனக்குச் சொல்லுங்கள்; ஏதோ ஒரு பெண் அங்கே அமர்ந்தவாறு, வேறு ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிற அந்தக் காட்சி மேடையில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், சரி, 100ஸ்திரீயே, இங்கே வாருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா?விசுவாசிக்கிறீர்களா? அந்த வயிற்று கோளாறு சுகமாகப் போகிறது என்று நம்புகிறீர்களா? (அந்த சகோதரி, 'ஆம்' என்கிறார்கள் - ஆசி.) சென்று இரவு உணவை உட்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள்? முதுகிலும், சிறு நீரகங்ளிலும் இருக்கிற வியாதியைத் தேவன் குணமாக்கப் போகிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா? விசுவாசமுள்ளவராய் வீட்டிற்குச் சென்று சொல்லுங்கள், ''இயேசு கிறிஸ்து என்னைக் குணமாக்குகிறார்'' என்று. சந்தேகப்படாமல், விசுவாசம் கொள்ளுங்கள். வாருங்கள், ஐயா. உங்கள் ஜெப அட்டை எண் அழைக்கப்பட்ட பொழுது. ஜெப வரிசையிலிருந்து புறப்பட்டு பக்தியோடு, மிகுந்த சந்தோஷத்தோடு வந்திருக்கிறீர்கள். தேவன் உங்கள் இருதய நோயைக் குணமாக்குகிறார். அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், விசுவாசத்தோடு உங்கள் வழியே செல்லுங்கள். அது உங்களை விட்டு அகன்று போய். நீங்கள் சுகித்து இருப்பீர்கள். அது சரி. விசுவாசம் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள். ஸ்திரீயே, அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்னுடைய கரங்களை உங்கள் மீது வைத்தால், சுகம் பெற்றுவிடுவீர்கள் என்று எண்ணுகிறீர்களா? ஒன்றும் நான் பேசாமல், என் கரங்களை மட்டும் வைத்தால் போதுமா? (அந்த சகோதரி, “அதை கூட நீங்கள் செய்ய வேண்டாம்'' என்று சொல்லுகிறார்கள் - ஆசி.) முன்புக்குச் செல்லுங்கள். ஆமென். அதைச் செய்யும் வழிமுறை அதுவே. அது சரி. 101வாருங்கள், அம்மா. சகோதரியே, எதை விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? விகவாசிப்பீர்களென்றால் தேவன் உங்களில் உள்ள குறைவை எனக்குச் சொல்லக்கூடும் என்று தெரியுமா? நீரிழிவு நோய் தேவனுடைய சமூகத்தில் ஒன்றுமல்ல. அதை அவரால் குணமாக்க முடியும். விசுவாசிக்கிறீர்களா? அது சரி, சென்று, சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். சரி ஐயா, வாருங்கள் ஐயா, நான் உங்களுக்கு அந்நியனாயிருக்கிறேன். நரம்புத் தளர்ச்சியிருப்பதால், “போய்விடுங்கள்'' என்று ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். அது உங்களுக்கு முடியவில்லை, அங்கே ஏதோ ஒன்று இருந்து கொண்டு உங்களை பயமடையச் செய்கிறது. அது சரி. ஆனால் நீங்கள் நிற்கிற அதே இடத்தில், அது உங்களை விட்டு அகன்று போயிற்று. விகவாசத்தோடு செல்லுங்கள். அது ஒரு போதும் உங்களை அணுகுவதில்லை. விசுவாசித்துப் புறப்பட்டுச் செல்லுங்கள். ஆமென். விசுவாசங் கொள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள். அது சரி. அந்த சகோதரிக்கு அநேகப் பிரச்சனைகள். கீல்வாத நோய், தேவன் உங்களை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? (அந்த சகோதரி, 'ஆமென்' என்று சொல்லுகிறார்கள் - ஆசி) முழு இருதயத்தோடும் விசுவாசித்து, “தேவனுக்கு மகிமை உண்டாவதாக'' என்று சொல்லிய வண்ணம் புறப்பட்டுச் செல்லுங்கள். 102வாருங்கள் அம்மா, (அங்கே இருந்து விசுவாசிக்கிறீர்களா?) நீரிழிவு வியாதி இரத்தத்தில் உள்ள எந்த வியாதியையும் தேவனால் குணப்படுத்த முடியும். இதை விசுவாசிக்க மாட்டீர்களா? நிச்சயமாக. அவரால் கூடும். விசுவாசமுடையவராய், “ஆமென்'' தேவனுக்கு ஸ்தோத்திரம்! என்று சொல்லியவாறு புறப்பட்டுப் போங்கள், வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்பதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், புறப்பட்டுச் செல்லுங்கள், முழு இருதயத்தோடும் விசுவாசித்தவர்களாய், இப்பொழுது சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஐயா, அப்படியே வாருங்கள். இருதய நோயைத் தேவனால் குணமாக்க முடியும் என்று நம்புகிறீர்களா? நரம்பு சம்பந்தப்பட்ட எல்லாமும் உங்களை விட்டு அகன்றுபோகும் என்று விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசத்தோடு புறப்பட்டுப் போங்கள். ஆமென். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இங்கே இருக்கும் மற்றவர்கள் காரியம் என்ன? விசுவாசிக்கிறீர்களா? (சபையார், “ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) 103உங்கள் ஊனமுற்றவர்கள் எங்கே? ஒரு சக்கர நாற்காலியைப் பார்க்கிறேன். ஐயா, என்ன சொல்லுகிறீர்கள்? என்னை நோக்கிப் பாருங்கள். என்னை விசுவாசிக்கிறீர்களா? தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்கள். அப்படியானால், என்னைப் பாருங்கள். உங்கள் பிரச்சனை கால்களில் தான். மருத்துவமனைக்குச் செல்ல இருந்தீர்கள்; ஆனால் அதைச் செய்ய விரும்பவில்லை; இங்கே வந்தால் சுகத்தைப் பெற்றுவிடுவீர்கள், மருத்துவமனை செல்ல வேண்டியதில்லை என்று எண்ணினீர்கள். அதுசரி. இதை விசுவாசிக்கிறீர்களா? அந்த சக்கர நாற்காலியில் உட்காருவீர்கள் என்றால், குஷ்டரோகிகளைப் போல நீங்கள் சாகத்தான் வேண்டும். மருத்துவரால் நன்மையொன்றும் உங்களுக்கு செய்யமுடியாது. ஆகவே, இந்த இரவில் ஏன் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளக் கூடாது? முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். சக்கர நாற்காலியை விட்டு எழுந்திருங்கள். அதன் ஒரு நுனியைப் பிடித்துத் தள்ளிவிடுங்கள். பின்பு வாசலுக்கு வெளியே சென்று வீட்டையடைந்து, சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது? இதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் எழுந்திருங்கள். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் சக்கர நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள். 104உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? சுகம் பெறவேண்டும் என்று விரும்புபவர்கள்! விசுவாசத்தோடு எழுந்து நில்லுங்கள். எழுந்து நில்லுங்கள்! உங்களில் என்ன குறை உள்ளது, எவ்வளவாய் முடமாயிருக்கிறீர்கள் என்பது பற்றி கவலையில்லை. அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. எழுந்து நிற்கும்படி சவால்விடுகிறேன்! ஒவ்வொருவரும் எழுந்து நில்லுங்கள், ஒவ்வொரு முடவனும்; நீங்கள் எங்கே இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், உங்கள் கால்களில் எழுந்து நின்று, சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பார்த்தீர்களா? 105இப்பொழுது நம் கரங்களைத் தேவனுக்கு நேராக உயர்த்துவோம். பரலோகப் பிதாவே, ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம். பார்த்தீர்களா? நம்மில் ஒருவரும் பலவீனமானவர் இல்லை. எல்லோரும் சுகமாக்கப்பட்டனர். பிதாவே, உமக்கு எப்படி நன்றி சொல்வோம்! தேவனே, இப்பொழுது ஜெபிக்கிறோம். ஒவ்வொரு நொடியும், பிசாசைத் தோற்கடித்து அவிசுவாசத்தை துரத்த வேண்டுமென்று. பிசாசே, இயேசுவின் நாமத்தில், இந்த ஜனக் கூட்டத்தை விட்டு வெளியே வா! நீ தோற்கடிக்கப்பட்டாய். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் இவர்கள் ஒவ்வொருவரும் சுகமாக்கப்படுவார்களாக.